நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, May 12, 2016
சந்திர மங்கள யோகம்(sandra mangala yogam)
ஜோதிட சாஸ்திரத்தில் பல யோகம்கள் சொல்லபட்டாலும் கோள்களின் கூட்டுவிளைவே யோகம் ஆகும் இரு கிரகத்தின் சேர்க்கை யோகம் தரும் நிலையில் அமைந்து இருவரும் பகை பெற்ற கோள்களாக இருப்பின் யோகத்தை தருவது இல்லை மாறாக இரு பாவத்தினால் ஜாதகன் அனுபவிக்க வேண்டிய பலாபலனை கெடுத்து தடுத்து அதன் தொடர்பான காரகத்துவம் நசிந்து விடுகிறது ஜாதகன் அனுபவிக்க முடிய வண்ணம்…
சந்திர மங்கள யோகம் சந்திரனுக்கு 1-4-7-10-ல் செவ்வாய் அமைய பெற்றால் ஜாதகனுக்கு படைவெல்லும் திறனும் தந்திர குணமும் அதனால் எதிரிகளை அழித்து வெற்றி வாகை சூடும் வாய்ப்பே தர வல்லது சந்திரன் மனதெளிவும் செவ்வாய் வீரமும் தைரியமும் தருபவர் மனமும் பிரச்சினைகளை சமாளிக்கும் வலிமையையும் அமைந்தது விட்டாலே போதும் வாழ்வின் பெரும் பகுதியே அழகாக கடந்து விடலாம்… சந்திரன் செவ்வாய் இருவரும் சமஅளவில் கெடாமல் இருக்க வேண்டும் சந்திரன் கெட்டு விட்டால் மனமானது தெளிவற்ற போக்கினால் என்ன செய்வது என்பதே அறியாத போக்கை தந்து விடும் செவ்வாய் வலுத்து விட்டால் மனம் போன போக்கில் சக்தி வீணாகி விடுகிறது எதற்கு எடுத்தாலும் கோபமும் ஆத்திரமும் கர்வமும் தந்து விடுகிறது….
செவ்வாய் பலம் இழந்து சந்திரன் பலம் பெற்றால் தெளிவான மனநிலை எதையும் தைரியமாக அணுகும் போக்கு இல்லாமலும் தாழ்வு மனப்பான்மையால் வருகின்ற வாய்ப்பே பயன்படுத்தி கொள்ள நிலையே தருகிறது….
நான் மேல் சொன்ன குணம்களும் தன்மைகளும் இல்லாமல் எந்த ஒரு வெற்றியாளனை பார்த்து விட முடியாது …..
யோகம்கள் என்பது குணம்களின் வெளிப்பாடு பெரும்பாலான ஜாதகத்தை எடுத்து கொண்டால் சந்திராமங்கள யோகம் அமைந்து இருக்கும் அவர்கள் எல்லோரும் யோகத்தின் பயனை அனுபவிக்காமல் அல்ல…#மிக சிறப்பாக அனுபவித்து வருகிறார்கள் குணம்களின் வழியாக சந்திரன் பலம் பெற்று செவ்வாய் பலமாகி இருப்பின் சந்திரா தசையோ சூரியதசையோ வருமாயின் மிக உயர்ந்த ராஜயோக பலனை அள்ளி தருகிறது அரசியல் செல்வாக்கு மதிப்புமிக்க பதவிகள் பெரும் செலவந்தர்களாக சக்திமிக்க மனிதராக வளம் வர செய்கிறது ஆனால் இவற்றுக்கு யாவும் சந்திரன் செவ்வாய் பலம் மட்டும் அல்ல மற்ற கோள்களின் பலமும் அதிமுக்கியம்….சந்திரன் செவ்வாய் நிற்கும் நட்ச்சத்திரம் லக்ன சுப கிரகமாக அமைய வேண்டும் நல்ல கோட்சார காலகட்டமாக இருக்க வேண்டும்……செவ்வாய் பாதிக்கபடாமல் இருந்தாலே போதும் யோகம் செயல்படும்…….
ஜோதிட ஆலோனைக்கு தொடர்புக்கு-+918428211819
Make Money Online : http://ow.ly/KNICZ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment