Friday, April 17, 2015

கர்மாவும் சனியும்


சனி
சனி நமது ஜாதகத்தில் எங்கு அமைய பெற்றுள்ளதோ அந்த இடத்தின் முன் ஜென்மாவின் விட்ட குறை தொட்ட குறை நாம் இந்த பிறவியில் கடனை கழிக்க வேண்டி வரும் எப்படி என்றால் ஒருவருக்கு சனி லக்னம் பாவம் என்றால் நிச்சயம் இவரது வாழ்வு முன் பகுதி இருள் நிறைந்த ஒன்றாக அமையும் தந்தை யால் கிடைக்கும் பலாபலன்கள் கூட அனுபவிக்க முடியாமல் போகலாம் சிலருக்கு உடல் ரீதியாக மிக நலிந்த நிலையம் மிக அதிகமாக யோசித்து வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற வேட்கையும் எப்பொழும் இருக்கும்......
ரெண்டாம் இடத்தில் சனி பகவான் இருப்பின் சிலருக்கு கல்வி தடையும் தாய் வழியால் வருகின்ற பாசம் தடை பட்டு போதல் எதிர்பாராத கண்டம்களை சந்திக்கும் சூழல் முற்ப்பகுதியான 25 முதல் 33 வரை மிக பிரகாசமான வாழ்வு உண்டாகும்.செல்லம் பெருக்கு உண்டாகும் பணம் வந்தால் கொட்டும் போதும் போதும் என்ற அளவு

3-ம் இடத்தில் சனி பகவான் இருப்பின் சகோதருக்கு நனமை செய்கிறேன் என்ற பெயரில் தான் சம்பாதித்த அனைத்தையும் சகோதருக்கு செலவு செய்பவராக இருப்பர் சகோதர்கள் இவரிடம் உண்மையான பாசத்தோடு இருக்க மாட்டார்கள் இவரிடம் வரும் லாபம் எல்லாம் அனுபவித்து விட்டு பின் செய் நன்ரி மறந்து விடுவார்கள்

No comments:

Post a Comment