எட்டாம் இடத்து புதன் என்ன செய்வார்?
புத்திகாரகன் புதன் அமரும் இடம்களில் மிக சிறப்பான ஸ்தானம் என்றால் எட்டாம் பாவம் மட்டுமே எட்டாம் இடத்தில் அமரும் புதன் செல்வபெருக்கே தருவார் பலனை அபிவிருத்தி செய்து தனக்கு உண்டான பலன்களை வாரி வழங்குவார்..
குறிப்பாக மிதுன லக்னத்தில் பிறந்தோருக்கு மிகவும் சிறப்பான யோகத்தை அள்ளி தருகிறது.பொருளதாரத்தில் மிகவும் உயர்வு படிப்பில் தடையும் உண்டாக்கும்.நான் பார்த்த வரை புதன் இந்த லகனத்துக்கு மறைவு பெற்றவர் யாவரினும் படிப்பில் சிறப்பு இல்லாமல் போகிறது அதை நேரம் தனது சாதுரியமான பேச்சாலும் புத்திசாலிதனத்தாலும் தந்திரமான செயல்பாடுகளும் சமுதாயத்தில் நல்லதொரு அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்க பெற்று வளமோடு வாழ்கிறார்கள்..
மேல் சொன்னது போல் எட்டாம் இடத்து புதன் செல்வபெருக்கே தருவான் சொல்லி இருந்தேன்.அவை எந்த விதமான பாவத்துக்கு உட்பட்டவனோ அதருக்கு தகுந்தாற்போல் பலனை அள்ளி தருவார்....
ரெண்டாம் இடத்துக்கு அதிபதியாகி எட்டாம் இடத்தில் இருப்பின் பொருளாதாரத்திலும் பண வரவு தொழிலில் தனது வாக்கு சாதுரியத்தால் நன்றாக சம்பாதிக்கும் திறனும்.பண பற்றாக்குறை இல்லாத அளவு பணவரவு வந்து செல்லும்...
மூன்றாம் இடத்துக்கு அதிபதியாக இருப்பின் சகோதர்களை அதிகம் தரும் கூட பிறந்த உடன் பிறப்புகள் எட்டுக்கு மேல் இருப்பார்கள்..நல்லதொரு எழுத்து ஆற்றலும் கற்பனை திறனும் கதை எழுதுவதில் வல்லவராக இருப்பார்...எதையும் முன்கணிப்போடு ஒரு காரியத்தை செய்வதில் கெட்டிக்காரர்....
நான்காம் வீட்டுக்கு அதிபதியாகி எட்டில் இருப்பது முதல் தரமான யோக நிலை எனலாம்..அதில் முதல் நிலை மிதுன லக்னம் ஜாதகருக்கு பல வீடுகள் அமையும் நான்கு வீடுக்கு குறையாமல் அமையும்.அதை போல் இவர்கள் பெரிய மாளிகையோ பரந்து விரிந்த இடத்திலோ வசிப்பது இல்லை..பெரிய அடுக்க மாடி கட்டிடம் இருப்பினும் இவர்கள் வாழ்வு வால் போன்ற சிறு வீட்டில் மட்டுமே....வசிப்பார்
No comments:
Post a Comment