ஜோதிடனுக்கு
புதனை ஜோதிடத்துக்கு முன்னிலை படுத்துகிறார்கள் ஜோதிடத்தில் புதனின் பலம் இருந்தாலே அவனால் ஜோதிடனாக ஜொலிக்க முடியும் வாக்கு பலிதம் புதனலே கிடைக்கிறது என்கிறார்கள்..சரி அந்த புதன் ரொம்ப நேர்மையானவர் என்று நீங்கள் எடுத்து கொண்டால் ஏமாந்து போவது நீங்களே ?
புதனின் செயல்பாடுகள் மற்றவர்கள் என்ன பேசுகிறாரோ அதை தனக்கு சாதகமாக ஆக்கி தனக்கே உரிய ஸ்டைலில் பேசுவது ஆகும்.புதன் என்றாலே நுண்ணறிவு என்பது ஆகும் எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து ஆதில் என்ன இருக்கிறது என்பதை படித்து கெட்டியாக கணக்கு போடுவதில் திறனை தருவார்.புதனுக்கு பொய் பேசுபவன் என்றும் சொல்லலாம் புதனின் ஆதிக்கம் கொண்டவர்கள் பலரை நீங்கள் பார்க்கலாம் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்தது போல் கதை சொல்லுவதில் வல்லவர்கள்.ஒரு ஜோதிடனுக்கு முக்கியமாக என்ன வேண்டும் சாமர்த்தியம் அது எப்பற்பட்ட சாமர்த்தியம் என்றால் இடத்துக்கு தகுந்தாற்போல் தன் பேச்சையும் தன்னையும் மாற்றி கொண்டு வளைந்து கொடுத்து செல்வர்.அதிகாரமும் செல்வ செழிப்பும் எங்க உள்ளதோ அங்க உலவும் தன்மையே பெற்றவர் புதன் அப்போ ஒரு ஜோதிடனுக்கு புதனின் பலம் வேண்டும் என்றால் நான் மேல் சொன்ன அனைத்தும் கிடைக்கும்...
புதனொடு சம்பந்தம் பெறும் கிரகத்துக்கு ஏற்றபோல் ஒரு ஜோதிடனின் செயல்பாடுகள் இருக்கும் தனக்கே தானே ஆராச்சி செய்வதாக பல நடக்காத விஷயம்களை தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு பலன் சொல்லி அசத்து வருவதாக எழுதி தள்ளும் நபர்களுக்கு எல்லாம் சந்திரன் புதன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஏன் என்றால் இவர்களே எப்படி பொய்களை காலத்துக்கு ஏற்றபோல் அழகா சொல்லுவதில் வள்ளுவர்கள்.
புதன் என்றலே வியாபாரம் ஆகும் அப்போ ஒரு ஜோதிடனுக்கு புதன் பலம் பெற்று இருந்தால் அவன் அதை சுலபமாக எப்படி வியாபார பொருளாக சந்தை படுத்தி சம்பாதிக்கலாம் என்றே வித்தையே அறிந்தவராக இருப்பார்கள் .....
அப்போ அர்பணிப்பு ஆராச்சி என்பது எல்லாம் யார் தருகிறார்கள் ....தொடரும்

No comments:
Post a Comment