Monday, September 1, 2014

ஜாதகம் -1

ஜாதகம் எண் -1 

முந்தய பதிவில் இந்த ஜாதகருக்கு சுக்கிர தசை எப்படி இருந்து இருக்கும் என்று கேட்டு இருந்தேன் பதில் அளித்த அனைவர்க்கும் நன்றி...
சுக்கிரன் கன்னி லக்னத்துக்கு தனம் பாக்கியாதிபதி 12-ல் மறைவு சுய சாரத்தில் உள்ளார்.சுக்கிரனுக்கு 12-ம் இடம் மறைவு அல்ல இருந்தாலும் அவரது தசை பெரிய அளவு யோகத்தை தந்து விடாது....
பாக்கியாதிபதி தானாதிபதி இரண்டு அதிபத்தியம் பலன்களை ஜாதகர் சுக்கிர தசையில் அனுபவிப்பர்...சுக்கிரன் சுய காலில் நிற்பதும் மூல திரிகோண வீடு துலாம் என்பதாலும் 2-ம் வீட்டின் பலனை முதலில் தரும் அதன் அடிப்படையில் சுக்கிரன் தசை முதல் 10 வருடம் போராட்டமும் தொழிலில் பிரகாசமாக இல்லை....
சுக்ரனின் மறு பகுதி ஜாதகருக்கும் 9-ம் இடமான பாக்கிய பலனை அள்ளி தந்துள்ளது.....அரசு வழியில் அதையும் கட்சியில் முக்கிய பொறுப்பு ,தேர்தலில் போட்டியிட்டு நகர மன்ற துணை தலைவர்கள் தேர்வு செய்ய பட்டர்...(முன்னால் நகர மன்ற துணை தலைவர் )
சுக்கிரன் சாதாரணமாக இருந்தால் இப்படி பட்ட யோககளை செய்ய மாட்டார்...இவரது ஜாதகத்தில் இந்து லக்னம் சிம்மம் எந்த ஒரு கிரகமும் இந்து லக்கனத்தில் இருந்தால் நிச்சயமாக கிரகத்தின் கேடு பலனை குறைத்து யோகத்தை தான் செய்யும் எனது அனுபவத்தில் கண்ட உண்மை....
தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்......பணம் அதிகம் அளவு செலவு செய்து அனைத்தையும் இழக்கும் நிலை உண்டாக்கியது....தற்போதும் இவரது வருமானம் வசதிக்கு குறை இல்லாத நிலை சுக போக வாழ்வு வாழுகிறார்......எப்படி இது சாத்தியம் இவரது குடும்பம் நிலை என்ன மனனவி எப்படி ?

ஸ்.பார்த்தசாரதி-9092521180

No comments:

Post a Comment