Thursday, November 20, 2014

நான் யார் ?-1

நான் யார் இது தான் இந்த உலகில் வாழ்வில் மனிதன் அணைத்து சுகம் துக்கம் அனுபவித்து விட்டு அடுத்த என்ன என்ற கேள்வி வரும்  நிலையில் அவனுள் ஒலிக்கும் குரல் தான் நான் யார் ?

நமது பெரும்பகுதி வாழ்வினை புறநோக்கு சிந்தனையில் வாழ்ந்து வருகிறோம் வெளியில் நடக்கும் பல விதமான சம்பவம்கள் பிரச்சனைகள் ஏற்ற தாழ்வுகள் என்ற பார்வையில் நமது மனம் புத்தி அறிவு செயல்பாடுகள் அனைத்தையும் எந்த அளவு விரிவுபடுத்தி பார்க்க முடியுமோ அந்த அளவு நம்மை நாம் விரிவு படுத்தி கொண்டு போகயில் ஒரு நாள் நம்மை நாம் தனிமையில் அதாவது சூட்சம ரீதியாக பிரிந்தனரும் உணர்வு ஏற்படும்போது நமது ஆதி வீட்டின்ன மறந்து எங்கோ ஒரு முலையில் வாழ்ந்து வருகிறோம்..

நம்முள் எப்பொழுது அந்த சிந்தனையின் துளி துளிர் விட ஆரம்பம் ஆகிரோதோ அப்பொழுது நமக்கு நாமே கேக்கும் நிலையும் தேடலும் ஏற்பட்டு விட்டு விடுகிறது...ஜோதிட ரீதியாக பார்க்கையில் ஜீவகாரகன் குருவும் கர்மா காரகன் சனியும் தான் நமது இந்த பிறப்பின் நோக்கத்தை திரும்ப திரும்ப நினைவு படுத்தி கொண்டு உள்ளார்கள்

முக்கியமாக ஜீவ காரகன் குரு பிறப்பின் நோக்கத்தையும் கர்ம காரகன் சனி கர்மாவின் தன்மையும் நமக்கு சுட்டி காட்டி வருகிறார்கள்....
ஆத்மா காரகன் சூரியன் நமது ஆரம்பம் நிலைய இருப்பு என்ன என்பதை சூட்சம் தன்மையில் நமது ஜாதகத்தில் அமையும் இடம் நிலைய பொருத்து கடந்து வந்த பிறவியின் தன்மைய காட்டுகிறது

ஆத்மா என்ற நிலைக்கு உயிர் தந்து ஜீவன் உண்டாக ஆதி மனம் என்ற ஒன்று இல்லாமல் ஆரம்பம் மற்றும் முடிவு நிச்சயம் இல்லை....ஆரம்பம் எந்த அளவு பதிவு அற்ற நிலையில் வந்தோமோ அதை பதிவுகள் அற்ற நிலைய ஒரு மனிதன் எட்டும் வரை பிறவியின் நோக்கம் முடிவு பெறுவதும் இல்லை...

சந்திரன் இருக்கும் நிலைய பொருத்து தற்போது பிறவி எடுத்து இருக்கும் மனிதனின் பரிணாம வளர்ச்சி அவனுள் விதையாக விதைக்க பட்டு இருக்கும் செடிகள் வளருவதும் வளராமல் இருப்பதும் சூரியனின் தொடர்பை வைத்து நிர்ணயம் செய்யபடுகிறது
 பார்த்தாவின் பார்வை தொடரும் .....

1 comment: