இன்று மதியம் facebook நண்பர் ஒருவர் போன் செய்தார்..இவர் தற்போது ஜோதிடம் ஆரம்ப நிலை கற்று வருகிறார்...
எம்மிடம் ஒரு ஜாதகம் உள்ளது விளக்கம் தர முடியுமா என்று வினவினார்.சரி சொல்லுக கிரக நிலைகளை என்றேன் அவர் சொன்னது .....
கும்ப லக்னம்
3-ல் சனி
4-ல் சந்திரன்
6-ல் சுக்கிரன்
7-ல் சூரியன் கேது
8-குரு புதன்
வாக்கிய பஞ்சகம் படி 11-ல் செவ்வாய் (திருகணிதத்தில் 10 செவ்வாய் பிறகு பார்த்தேன் )
தற்போது நடைபெறும் தசை குருவில் செவ்வாய் புத்தி என்று சொல்லி முடித்து இவங்க லைப் எப்படி இருக்கும் என்றார்....உண்மையில் யாம் வெளிய இருந்ததால் என்னால் முழுமையான ஜாதகத்தை கணிக்க முடியவில்லை....
எப்பவும் ஒரு கேள்வி என்று வந்து விட்டால் அங்க நோக்கம் இருக்கும் அந்த கேள்வி ஆரம்பித்த புள்ளி என்ன என்பதை கண்டுபிடித்து விட்டால் சுலபமாக விடையும் கிடைத்து விடும்....
எனக்கு இந்த ஜாதகத்தில் கிடைத்த புள்ளி ஒன்று தான் அவை சூரியன் கேது சேர்க்கை மற்றும் குடும்பம் லாபம் அதிபதி குரு எட்டில் மறைவு....ஒரு விஷயம் மட்டும் தான் மனதில் பட்டது....சில நேரங்களில் ஜோதிடத்தை பொறுத்த வரை சரியாக பலன்கள் வரும் நாம் சொல்லுவது எல்லாம் பலிதம் ஆகும்...
அந்த புள்ளி சூரியன் கேது சேர்க்கை நிச்சயம் திருமணம் வாழ்வினை அதாவது முதல் திருமணம் நிலைக்காது அல்லது திருமணத்தில் பிரச்சனை காலம் கடந்த திருமணம்....மொத்தத்தில் இந்த ஜாத்ககிக்கு சுகம் இல்லை என்றேன்...
அடுத்து தாய்க்கும் சுகம் இல்லை தோஷம் தான் ...
தந்தைக்கும் பாதிப்பு அவர் வழியில் சுபம் லாபம் இல்லை...
இது தான் எமது பதில்.....
அவரது பதில் ஆம் சார் இந்த பெண்ணின் முதல் கணவர் திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் இறந்துவிட்டார்.இதயத்தில் இருந்த ஓட்டையே மறைந்து திருமணம் செய்து விட்டார்கள்.....பெண்ணின் தந்தை இவருக்கு 10 வயது இருக்கும்போது இறந்து விட்டார்...
அடுத்து யாம் பதில் அளித்தது பெண்ணுக்கு அரசு வழியில் ஆதாயம் வருமானம் உண்டு.என்பதை மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன்.....அவரும் ஆம் சார் இந்த பெண் அரசு வேலையில் உள்ளார்கள்.teacher என்றார்....
No comments:
Post a Comment