Tuesday, December 2, 2014

ஜி.கே வாசன் ஜாதகம் நாடி முறையில் ஆய்வு

நாடியின் விதி படி ஜீவகாரகன் குருவுக்கு 5-9 ல் செவ்வாய் சூரியன் இருப்பது அரசியல் தொடர்பும் அதன் வாயிலாக யோகமும் தந்து உள்ளது..முக்கியமாக நாடி விதியின் படி தந்தைய பார்ப்பது என்றால் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 5-9 குரு செவ்வாய் இருப்பது தந்தையின் அதிகார பலமும் செல்வாக்கும் அரசியலில் அவர் அடைந்த நிலைய காட்டுகிறது...

கர்மா காரகன் சனிக்கு 3-குரு 7-ல் செவ்வாய் 11-ல் சூரியன் இந்த மூன்றும் மேற்கில் இருப்பது இவரது தொழில் அரசு மற்றும் அதை ஆளும் செவ்வாயின் காராகத்துவதில் அமைந்து உள்ளது என்றாலும் சனியின் பகை கிரகமான செவ்வாயின் தொடர்பு இருப்பதால் எதையும் பல போராட்டத்துக்கு பிறகு தான் கிடைக்கும் எனலாம் அடுத்து அடுத்த சனி செவ்வாய் தொடர்பு எவளவு கடுமையாக வேலை செய்தாலும் தனித்து நின்று தலைமை தாங்கும் தகுதிய செயல் படுத்த விடாது

தற்போது ஜீவகாரகன் குருவை நாடியின் விதி படி பிறப்பில் ரிஷபத்தில் ராகுவும் கோசாரத்தில் கேதுவும் ரெண்டு பிடிக்குள் அடைபட்டு இருப்பது அவளவு சரியான முடிவு எடுக்க முடியாதா எதிர்கால பயத்தினை உண்டாக்கி உள்ளது .....

அடுத்து ராகு கேது கர்மா காரகன் சனி மற்றும் செவ்வாய் இருவரையும் கடக்க இருப்பது நிச்சயம் அரசியல் வாழ்வில் இவருக்கு மிக பெரிய சரிவு தான்

அடுத்த வருடம் ஜூன் முதல் இவரால் பெரிய அளவு தாக்கத்தை அடுத்த 2 வருடம் தமிழ்நாடு அரசியலில் ஏற்படுத்த முடியாது ........

No comments:

Post a Comment