Sunday, January 25, 2015

சுக்கிர தசையும் மரணமும்


*இந்த ஜாதகத்தை சற்று பார்க்கவும் நீங்கள் மிகுந்த ராஜயோகம்கள் நிறைந்த ஜாதகர் இவர் மலேசிய தமிழர் கடந்த ஆண்டு இறந்து விட்டார் நல்ல யோகமான தசை நடைபெற்றும் ஏன் இறந்த என்பது அவரது சகோதரின் கேள்வியாக உள்ளது...
*சென்னையில் இருக்கிற குருக்கள் ஒருவரிடம் ஜாதக ஆலோசனை பெற்றுள்ளார் அவரும் உங்கள் அண்ணன் ஜாதகம் மிகந்த யோகமானது தற்போது நடக்கும் தசையும் யோகம் தரும் இருந்தாலும் அஷ்டமா சனி நடைபெறுகிறது ஆதலால் சனி பகவனை வணங்கியும் ஏன் அவர் கெடுதல் செய்து விட்டார் சென்ற வருடம் 17 ஜூலையில் அவர் இறந்துவிட்டார் என்ற கேள்வியோடு பிரபலமான ஒரு குழுவில் பிரபலமான மனிதர்கள் பேசி வருகிறார்கள் .....
*அதை சற்று ஜோதிடகடல் அன்பர்களுக்கு எனது பார்வையில் சொல்லணும் தோன்றியது அதன் சிதறல் பதிவாக பதிகிறேன் .....
*கடக லக்னம் அதன் அதிபதி சந்திரன் மீனம் ராசி அதிபதி குரு இருவரும் தத்தம் வீடுகளை பரிவர்த்தனை ஆகி உள்ளனர் ......இங்க பாக்கிய ஸ்தானம் மிகவும் பலமாக குரு சந்திராயோகமும் வலுவாக உள்ளது மற்றும் லக்குமி யோகமும் பலமாக உள்ளது ..
*5-10-ம் அதிபதி செவ்வாய் 4-11-ம் அதிபதி செவ்வாய் இருவரும் பரிவர்த்தனை பெற்று இருப்பதும் மிக சிறந்த ராஜயோகம் தான் வேறு என்ன இவர் ஜாதகத்தில் பிரச்சனை சுக்கிர தசையும் யோகாதிபதி செவ்வாய் பார்வை பெற்று நடைபெறுவது யோகத்தை தானே செய்யணும் பாதகத்தை எப்படி செய்யும் ?
*தசை புத்திகளை நாம் பார்க்கும் வேளையில் லக்னம் வைத்து மட்டும் பார்க்காமல் சந்திரனின் படியும் வைத்து பார்ப்பது தான் சரியான பலன்கள் வரும் சுக்கிரன் கடக இலக்கானதுக்கு பதாகதிபதி சந்திரன் நின்ற ராசிக்கு அஷ்டமாதிபதி அவர் நின்ற நட்ச்சத்திரம் சூரியனின் நட்ச்சத்திரம் சூரியன் 2-ம் அதிபதியாக இருந்தாலும் சந்திரனுக்கு ரோகத்திபதி ....
*சூரியன் மட்டும் தான் சுக்கிரனை இயக்க கூடிய வேர் ஆகும் எப்படி எனில் சூரியன் எந்த நட்ச்சத்திர காலில் உள்ளாரோ அவர் தான் சூரியனின் பலத்தை நன்மையோ தீமையே நிர்ணயம் செய்யபவர் .....லக்னத்துக்கு விரயாதிபதி புதன் ராசிக்கு பதாகஅதிபத்யும் அவர் தான் எட்டில் மறைந்து உள்ளது ..சுக்கிர தசையே யோகம் தர விடாது அதருக்கு பதில் பாதகத்தை தந்து மனிதனை வேதனையில் தள்ளிவிடும் ...
குறிப்பாக ஒருவருக்கு தசை சரி இல்லை எனில் கோட்சாரமும் சரி இல்லாமல் போய்விட்டால் அனைத்தும் முடிந்து விடும் .........
*நாளை பார்ப்போம் .......உங்கள் ஆதரவை பொறுத்து தான் எனது சூட்சம பதிவுகள் தொடரும் .....

No comments:

Post a Comment