நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, May 12, 2016
தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா ?அம்மா ஆட்சி தொடருமா !
Posted on May 10, 2016 by admin நாட்டில் இன்று பரபரப்பாக பேசி கொண்டு இருப்பது சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சி ஆட்சி தொடருமா அல்லது எதிர்க்கட்சி வெற்றி பெறுமா என்பதாக ஒவ்வொருவரும் ஒரு கருத்து கணிப்பு சொல்லி வருகிறார்கள் இவற்றில் பெரும்பாலும் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என்பதாக உறுதி ஆகிவிட்டது எனது தனிப்பட்ட கணிப்பு அதுவே என்பதில் மாற்று கருத்து இல்லை…..நிற்க
ஒரு ஜோதிடனாக ஆராச்சியாளனாக எனது கணிப்பு இது தான் ! மாண்புமிகு அம்மா திரு.ஜெயலலிதா அவர்களின் சுய ஜாதகம் வலிமை இழந்து காணப்படுகிறது தசை புத்தியும் சரி கோட்சாரமும் சாதகமான அம்சத்தில் இல்லை என்பதே எனது கருத்து காரணம் என்ன? மிதுன லக்னம் சிம்ம ராசியில் பிறந்துள்ள அம்மா அவர்களுக்கு தற்போது குரு தசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது குரு நின்ற நட்ச்சத்திர நாதன் ஐந்தாம் வீட்டில் அமர்வு குரு பாதகாதிபதி ஆகி அஷ்டமாதிபதி சனி புத்தி நடப்பில் இருப்பது ஆட்சி கட்டிலில் மீண்டும் அமர வாய்ப்பே ஏற்படுத்தி தருவார் என்பது எளிதான விஷயம் அல்ல… தசை நாதன் குருவே சிம்மத்தில் உள்ள கோட்சார ராகுவும் கும்பத்தில் உள்ள சூரியன் சந்திரனை கோட்சார கேதுவும் தொடர்பு ஏற்படுத்தவது நிச்சயமா மிக பெரிய பலவீனம் தரும் பிறப்பு சந்திரனுக்கு ராகுவின் தொடர்பு மேலும் நிலைமையே சிக்கலாக உண்டாக்கும் ….
மூன்றாம் இடத்தில் செவ்வாய் வக்கிரம் பெறுவதும் கோட்சாரத்தில் சனி செவ்வாயே பார்ப்பதும் தற்போது கோட்சார செவ்வாய் சனி தொடர்பு விருச்சக்தில் உள்ளதும் உண்மைக்கு மாறான நிலையே மக்களிடையே உண்டாக்கி இறுதியில் மிக பெரிய ஏமாற்றம் உண்டாக்கும் போக்கை உண்டாக்கும் சூரியன் அரசியல் செவ்வாய் அதிகாரம் குரு அரசியலில் உயர்நிலை மூன்றும் ஜாதகத்தில் இன்று ராகு கேது பிடியில் அகப்பட்டுள்ளது எப்படி மீண்டும் ஆட்சியில் தொடர்வார்கள் என்பது புரியவில்லை சூரியனுக்கு கேதுவின் தொடர்பு அரசியலில் வழக்கு போன்றவற்றில் அவஸ்தைகள் சந்திக்க வேண்டி வரும் அதோடு அல்லாமல் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதல்வராக நீடிக்க முடியாத நிலை உண்டாக்கும்…
வரும் தேர்தலில் நாட்டின் முதல்வர் ஒரு ஆண் தான் வர போகிறார்…….
அதிமுக வெற்றி பெரும்பட்சத்தில் அம்மா அவர்கள் முதலவராக ஆவது கடினமே …..நீடிப்பதும் கடினமே …
இதை எல்லாம் விட கட்சியின் தலைவரின் ஜாதகமே வெற்றியே நிர்ணயம் செய்யும் அப்படி பார்த்தால் வருகிற ஒரு வருடம் வரை அம்மா அவர்களுக்கு சாதகமான காலம் அல்ல என்பது உறுதியாக தெரிகிறது …..என்னோட கணிப்பின் படி அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது அம்மாவின் ஜாதகப்படி எட்டா (தோல்வி ) கனியாகவே உள்ளது குறிப்பு- நான் இங்கு எழுதிய கணிப்பு என்பது எனது ஜோதிட பார்வையில் சொல்லப்பட்ட ஒன்று எனது கணிப்பு தப்பாக இருப்பினும் சரியாக இருப்பினும் எனக்கு ஜோதிடத்தில் ஒரு அனுபவம் மட்டுமே …..நன்றி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment