Friday, May 13, 2016

திருமண வாழ்வும் சனி செவ்வாய் பிளவும்


ஜாதகம் யோகம் நிறைந்தாக இருப்பினும் ஒரு குறிப்பிட்ட பாவம் பாதிப்பு அடைந்து இருந்தால் அவையே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானம் செய்யும் புள்ளியாக அமைந்து விடுகிறது .. ஒரு பெண்ணுக்கு களத்திர பாவமான 7-ம் வீடு அதிமுக்கியமான வீடு ஏன் எனினில் பணம் பதவி அழகு படிப்பு இவைகள் யாவும் வாழ்வில் அமைந்து நல்ல கணவர் அமையாவிட்டால் வாழ்வே சூனியம் ஆகி விடுகிறது அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் அதிலும் மிகுந்த பாரம்பரியம் மிக்க தமிழ் பெண்கள் வாழ்வு... இந்த பெண்ணின் ஜாதகமே மிக சிறந்த உதாரணம் எனது பதிவுகளில் அதிகம் எழுதபடுவது சனி செவ்வாய் சேர்க்கை பார்வை பற்றியே இரு கோள்களும் பார்க்கும் இடம், வெட்டும் புள்ளிகள் நிச்சயம் ஓர்வித பாதிப்பே தருகிறது அவற்றின் வீரியம் இருவரும் நிற்கும் நட்ச்சத்திரம்களை முடிவு செய்கிறது ... கடகம் லக்னம் சிம்மராசியில் பிறந்துள்ள ஜாதகிக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளில் கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்று உள்ளார் சென்ற மாதம் கிடைத்து விட்டது...குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சந்திரன் சேர்க்கை பஞ்சமா மற்றும் ஜீவனாதிபதி இலக்கானதி சேர்க்கை வலுமையான சந்திரமன்களா யோகத்தை தருகிறது அதுவும் பெண்களுக்கு செவ்வாயின் பலத்தை பொறுத்தே திருமண வாழ்கை சிறப்பே தரும் செவ்வாய் நல்ல கல்வி அறிவு வெளிநாட்டில் நல்லதொரு உயர்ந்த பதவியே அளித்தது.... திருமண வாழ்வில் தீராத வேதனையே அளித்து மறுதிருமணத்தை எதிர்நோக்கி உள்ளார் வீட்டின் உள்ளோர் கட்டாயத்தால் 7-வீட்டில் குரு நீச்சம் பெறுகிறார் சனி 7-ம் வீட்டை தனது மூன்றாம் பார்வையால் பார்க்கிறார் இதன் தன்மை நீச்ச களத்திரம் தரும் என்பது விதி குரு மதிப்பும் மரியாதையும் மிக்க தன்மை கொண்டது ஆனால் நீச்சம் பெறுவதால் வெளிபார்வைக்கு வரும் கணவன் நல்ல குடும்பத்தை சேர்ந்தவராக தென்படுவார் மதிப்புமிக்க வேலையில் இருப்பதே போன்றே போலி தோற்றத்தை காண்பிப்பார் சனி விருச்சக ராசியில் அமர்ந்து மூன்றாம் பார்வை செலுத்துவது மேல் சொன்ன பலனை உறுதி செய்கிறது சனி பார்வை திருட்டு தனத்தையும் நிலை இல்லா வேலை கொண்ட கணவனையும் தரும் சனி செவ்வாய் பார்வை குடும்ப பாவத்தை கெடுக்கிறது ஜாதககியின் புத்தி ஸ்தானத்தையும் கெடுக்கிறது ஏன் என்றால் யோசித்து முடிவு எடுக்கும் திறனை தாராமல் அவசர புத்தியே தருகிறது ....சனி செவ்வாய் சேர்க்கை என்றலே சோம்பல் குணத்தை தரும்... சனி சிம்ம ராசியில் உள்ள கால கட்டம் திருமண நடைபெற்றது அப்பொழுதும் சனி செவ்வாய் தொடர்பு அடுத்து சனி துலாம் ராசிக்கு வந்த கால கட்டம் சண்டை மணவாழ்வில் ஆரம்பித்து உள்ளது அப்பொழுதும் சனி செவ்வாய் தொடர்பு (கோட்சாரத்தில்) பெண்ணின் புகார் என்னவென்றால் கணவர் திருமணத்துக்கு பிறகு வேலைக்கு போவது இல்லை இருவரும் வெளிநாட்டில் இருந்தாலும் ஒருவரின் வருமானத்தை வைத்தே குடும்பம் நடத்தும் நிலை ஜாதகின் வருவாயே வைத்து செலவுகள் செய்து கொண்டு (கணவர்) திரிந்து உள்ளார் ஜாதகியின் வருமானத்தில் பல சொத்துக்கள் வேறு வாங்கி உள்ளார் ஒரு கட்டத்துக்கு மேல் பிரச்சினை பெரியதாகி இவரே பற்றி விசாரிக்கும் போதே அனைத்தும் தெரிகிறது திருமணத்துக்கு முன்பே எந்த வேலையிலும் இல்லாமல் இருந்து உள்ளார் பொய் சொல்லியே திருமணம் செய்து உள்ளார்கள் ....அதுவும் வெளிநாட்டில் குடியிரிமை வாங்கியும் பெண்ணின் தசை புத்தி செவ்வாய் தனிப்பட்ட வாழ்வில் யோகம் தந்தாலும் திருமண வாழ்கையில் இன்பத்தை தரவில்லை.. ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு பிறகு வாழ்கை யோகமானதாக அமைய வேண்டுமானால் பாக்கியஸ்தானம் அதன் அதிபதி வலிமையாக இருக்க வேண்டும் செவ்வாய் கெடாமல் இருந்தாலே போதும் நல்ல கணவன் அமைவார்.... நாளை ஜாதகியின் கணவர் பற்றி எழுதுகிறேன்

No comments:

Post a Comment