Wednesday, June 29, 2016

லக்கானதி யோகம்

யோக அடைவுகளில் மிக சிறந்தொரு யோகத்தை தருவது லக்கானதி யோகமே லக்னத்திலிருந்து 6-7-8-ம் வீடுகளில் தொடர் கோள்கள் அமர்வது மிக சிறந்த ராஜயோகமும் அற்புதமான வாழ்கையே ஜாதகனுக்கு தருகிறது என்றால் மிகையாகாது… சமுதாயத்தில் எதோ ஒரு வகையில் தன் சார்ந்த வகையில் மிக மேன்மையோடு வாழும் பாக்கியத்தை அள்ளித்தருகிறது மேல் சொன்னவே போல் கோள்கள் அமர அதில் உள்ள கிரகத்தின் தசை வந்து விட்டால் கேட்கவே வேண்டாம் ஜாதகனை நல்லதொரு நிலைக்கு தள்ளிவிடுகிறது என்பேன் அனுபவத்தில்… சுப கிரகம்கள் என்றால் எவை எல்லாம் கணக்கில் எடுக்கலாம் குரு சுக்கிரன் புதன் வளர்பிறை சந்திரன் (சூரியனும்) அமர வேண்டும் பாவ கிரகம்கள் என்றால் சனி செவ்வாய் ராகு கேது பாவ கிரகம்கள் இதில் உங்கள் சுப கிரகம்கள் மட்டும் அமைந்து விட்டால் _யோகத்தை தருகிறதா பார்த்தால் நிச்சயமாக இல்லை ஒரு யோகம் சொல்லப்பட்டுள்ளது அவை செயல்பாடு உங்கள் லக்னம் சார்ந்த பாப அசுப கோள்களின் நிலையும் பாவத்தின் அதிபதியும் வைத்து பலன் மாறுகிறது…. பாப கோள்கள் என்ற அடிப்படை இங்க பலன் தருவது இல்லை லக்னம் சுபராக அமைந்து விட்டால் வாழ்வில் சுகபோகத்துக்கு குறையில்லா வாழ்வும் மிக உயர் பதவியும் பொருளாதாரத்தில் நிறையான வாழ்வு அமைகிறது…. இந்த யோகமானது ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்த ஞானிகள் மகான்களுக்கு அமைகிறது மறைபொருள் தேடுகையில் அவற்றை அறிந்து உலக மக்களுக்கு போதிக்கும்ஆற்றலே தருகிறது எட்டாமிடத்தில் கேது தொடர்பு பெறும் பட்சத்தில் இறை ஆற்றலே உள்வாங்கும் திறனும் அவற்றை மனிதனுக்கு போதித்து இறைநிலையே அடைய வைக்கிறார்கள் பெரும்பாலும் இந்த யோகத்தின் தன்மை நேர்மையான வழியில் பொருள் ஈட்டி வாழ்வார்கள் பாப கிரகம்கள் அமர்ந்து விட்டால் மறைமுக வழியில் தனத்தை சேமித்து குறுக்கு வழியான தொடர்பு உண்டாக்கும் அதிலும் மிக சாமர்த்தியமாக தப்பித்து வாழ்வார்கள் சனி ராகு சேர்க்கையோடு சுக்கிரன் தொடர்பு கேட்கவே வேண்டாம் பெரும் செல்வத்தை தருகிறது….. அரசு வழி ஆதாயம் பெரிய மனிதர்களின் தொடர்பு இந்த யோகத்தால் விளைகிறது ….. சரி , ஆறு ஏழு எட்டில் பாவ கோள்கள் மட்டுமே இருப்பின் யோகத்தை தருமா என்றால் நிச்சயமாக யோகத்தை தராது என்பேன் சனி செவ்வாய் தொடர்பு மேற்கொண்ட இடத்தில அமர்ந்தலோ பார்வை பெற்றலோ யோகத்தை தருவது இல்லை மாறாக ஜாதகனின் வாழ்வே புரட்டி போடும் அளவு சம்பவம்களை தருகிறது சிலருக்கு ஊனத்தை தருகிறது அவை சார்ந்த காரகத்தை கெடுத்து விடுகிறது எவையும் கெடாமல் கிடைப்பது இல்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது ஆயினும் அவை போன்ற தொடர்பு இருப்போர் பல தீய வழிகளில் பொருள் சேர்ப்பதே லட்சியமாக திரிவார்கள் சிலர் சிறைவாசமும் அடைகிறார்கள் சந்திரன் ராகு சனி தொடர்பு உண்டாகி விட்டால் பலர் மனரீதியாக பாதிக்கபட்டு அவற்றிலிருந்து வெளிய வர முடியாத நிலை அடைகிறார்கள்…..
பல ஜாதகம்கள் யோகம் நிறைந்தாக தெரியும் உண்மையில் சற்று கவனித்து பார்த்தால் உண்மை புலப்படும்… ஒரு விதி விலக்கு – மேல் சொன்ன பாவ கிரகம்கள் சேர்க்கை பெற்று கோள்கள் இருந்தாலும் சுப தன்மை பெற்ற குருவின் பார்வை இருந்தால் நிச்சயம் சூரியனை கண்ட பனிபோல் ஆரம்ப காலகட்டத்தில் சில பாதிப்புகளை தந்தாலும் மிக யோகமான நிலைவாழ்வே தரும்….. குரு பார்வை மாற்றி காட்டும் வல்லமை கொண்டது…. ஜோதிட ஆலோனைக்கு -+918428211819 whatsup-=918428211819

No comments:

Post a Comment