Wednesday, June 29, 2016

மாமனார் வீட்டில் வாழும் யோகம்

மாமனார் வீட்டில் வாழும் யோகம் பாரென்று சொன்னபோது [பாக்கிய ஸ்தானந்த்ன்னில் சாரேன்று குருவோடுசந்திரன் பகைத்து நின்றால் வாரேன்று கேட்டபோக்கு மாமனார் வீட்டில்சேர்வான் கூரேன்று வீமர் சொன்னதுகுறி தப்பாதென்டு கூரே…. ஒருவரின் ஜாதகத்தில் குரு சந்திரன் சேர்க்கை பெற்று 9 -ம் வீட்டில் இருப்பின் திருமணத்துக்கு பிறகு மாமனார் வீட்டில் வாழ்வான்….. மாமனார் வகையில் ஆதாயம் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்… மேஷம் லக்னம் குரு சந்திரன் ஒன்பதுக்கும் பத்துக்கும் அதிபதிகள் இருவரும் 9-ல் சேர்க்கை பெறுவது மிக சிறந்த ராஜயோகத்தை தரும் கேந்திர கோணம் உரியவர்கள் திரிகோணம் பிரபலமான யோகம் தரும்…. (குரு சந்திரன் இருவரும் திதி சூனியம் பெறாமலும் குரு அஸ்தமனம் அடையாமல் இருப்பின் மேல் சொன்ன யோகம் உண்டாக்கும் ….) ரிஷப லக்னம் மூன்று பதினொன்று அதிபதியான சந்திரன் குரு 9-ம் வீட்டில் இருப்பது குரு நீச்சம் என்பதால் மாமனார் வீட்டு வழியில் சொத்துக்கு இருந்தாலும் அதை ஜாதகர் அனுபவிக்க முடியாத போக்கே உண்டாக்கும் மாமனார் வகையில் எதிர்பாராத யோகத்தையும் அள்ளித்தருகிறது……. மிதுன லக்னம் தனாதிபதி ஜீவனத்துக்கு அதிபதி ஒன்பதாம் வீட்டில் சந்திரனோடு இருப்பது மாமனார் வகையில் ஆதாயம் உண்டு குரு சந்திரன் ராகு நட்ச்சத்திரம் பெற்றால் ராகு உள்ள வீட்டை பொறுத்தே பலன் தரும் … கடக லக்னம் அதிபதி சந்திரன் ஆகி குரு பாக்கிய ரோகத்திபதி இருவரின் சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் இருப்பின் மிக சிறந்த ராஜயோகத்தை தரவல்லது சந்திரன் அல்லது குரு இருவரும் சனியின் நட்ச்சத்திர இல்லாமல் குருவின் நட்ச்சத்திரம் பெற்றால் முழுமையான யோகத்தை தரும் சிம்மலக்னம் சந்திரன் விரயாதிபதி குரு பூர்வ அஷ்டமாதிபதி சேர்க்கை ஒன்பதில் இருப்பது கடல் கடந்து செல்லும் யோகமும் மாமனர் வழியில் பெரியதொரு யோகத்தை தருவது இல்லை சிலருக்கு மாமனார் வகையில் வரவேண்டிய சொத்துக்கள் வழக்கு சண்டை இதிலே போகிறது இவர்களால் பெரியதாக அனுபவிக்க முடிவது இல்லை…..
கன்னி லக்னம் சந்திரன் லாபாதிபதி குரு சுகசப்தமாதிபதி ஒன்பதில் இருப்பது மாமனர் வகையில் மேல் சொன்ன பாடலின் படி எந்த வித சுகத்தையோ அனுபவிக்க விடுவது இல்லை ……..

No comments:

Post a Comment