கோவிலில் என்ன பிரச்சனை உள்ளது பிரசன்ன ஜோதிடம்
- நேற்று எமது பதிவே பார்த்த பிறகு என்னை தொடர்பு கொண்டு பேசிய வாலிபர் தனது தந்தைக்கு சொந்தமான கோவில் உள்ளது அவற்றில் நிறைய பிரச்சனைகள் நடக்கிறது சிலர் பிரசன்னம் பார்த்தால் என்ன பிரச்சனை என்பது தெரிய வரும் என்றார்கள்
- எனது பதில் அஷ்டமங்கள பிரசன்னம் பார்த்தால் கோவிலின் நிலை தெய்வ சிலைகளின் பரிகாரம் சொல்லலாம் தேவ பிரசன்னமும் கோவிலுக்கு எந்த சாமிக்கு சக்தி இல்லாமல் போய்விட்டது அதற்க்கான நிவர்த்தி செய்யலாம் என்றேன்
- நான் ஜாமகோள் பிரசன்னம் நபர் கேள்வி கேட்ட நேரத்தை வைத்து பார்த்தேன் கேள்வி மீண்டும் எங்கள் கோவில் பழைய நிலைக்கு திரும்புமா ?
- உதயம் மேஷம்
- ஆருடம் மேஷம்
- கவிப்பு ரெண்டாம் வீட்டில் கவிப்பு நின்ற நட்ச்த்திராதிபதி சூரியன் கோவிலே குறிக்கும் 9-ம் இடத்தில் இருப்பதும் பாதகதிபதி சனியோடு சேர்க்கை பெற்று இருப்பதும் உதயம் நின்ற நட்ச்த்திராதிபதி பாதக ஸ்தானத்திலும் அமைவதால் உங்கள் கோவிலில் பணம் திருடு போய் இருக்கும் பணத்தை ஏமாற்றி இருப்பார்கள் யாரை நம்பி நீங்கள் வேலை செய்ய கொடுத்தீர்களோ அவர்கள்
- எமற்றிவர் பெயர் கருப்பு அல்லது சாமி என்று இருக்கும் என்றேன்
- ஏமாற்றியவருக்கு அதன் பிறகு காலில் ஊனம் பாதிப்பு உண்டாகி இருக்கும்
- கோவில் நல்லதொரு பலமாக உள்ளது அங்க நடக்கும் மறைமுக ஊழல் பிரச்சனை காட்டுகிறது இன்னும் முன்று மாதத்தில் அதற்க்கான தீர்வு கிடைக்கும் என்றேன்
- கேள்வியாளரின் பதில்-
- கோவில் நிர்வாகத்தை கவினிக்க சொல்லி ஒருவரிடம் பொறுப்பே தந்து உள்ளனர் அவர் 5௦௦௦௦ருபாய் எதற்கும் கணக்கு காட்டாமலே செலவு ஆகி விட்டதாக சொல்லி விட்டார் அவர் பெயர் ரங்க சாமி அவருக்கு காலில் பிரச்சனை இல்லை
- எங்கள் கோவிலுக்கு பூஜை செய்ய புதியதாக ஒருவரே அழைத்து வந்தோம் அவருக்கே காலில் பிரச்சனை உண்டானது
மேலும் பல விபரம் கேட்டார்...இவை கோவில் பிரசன்னம் இதற்கு மேல் இதில் பார்க்க வேண்டாம் தக்க நபரே அழைத்து கோவிலில் பாருங்கள் என்று முடித்து கொண்டேன்
No comments:
Post a Comment