Monday, September 1, 2014

குழந்தை பாக்கியம்

திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகுது இது வரை குழந்தை பாக்கியம் இல்லை....

ஜாதகருக்கு கடக லக்னம் தனுசு ராசியில் பிரந்துள்ள இவருக்கு புத்திர ஸ்தானதிபதி செவ்வாய் சிம்மத்தில் வர்கொத்மம் பெற்று இருந்தும் அதன் தசை நடைபெற்றும் யோகத்தை தர வில்லை....
முதல் காரணம் ஜாதகர் பிறந்தது சஷ்டி திதியில் அதன் திதி சூனியம் ராசிகள் மேஷம் சிம்மம் எப்பொழுதும் திதி சூனிய பெற்ற கிரகம் தனது காரகதை இழந்து விடும் பலன் தருவதில் தோஷத்தை தான் தரும்...

அதை போல் ஒரு திதி சூனியம் பெற்ற கிரகம் மற்றொரு திதி சூனிய ராசியில் இருந்தால் கிரகத்தோட தன்மை முற்றிலும் பாதிக்க படும்....மேஷம் மற்றும் சிம்மம் இரு வீட்டின் அதிபதி செவ்வாய் சூரியன் இதில் செவ்வாய் புத்திர ஸ்தானதிபதி திதி சூனியம் அடைந்து மற்றொரு திதி சூனிய ராசியான சிம்மத்தில் இருப்பது கடுமையான புத்திர தோஷத்தை காட்டுகிறது...

ரெண்டாவது காரணம் செவ்வாய் பாவ கத்திரியோகம் பெறுவது ஒரு கிரகம் பலன் தர வேண்டும் என்றால் அதன் தூண்கள் என்று சொல்ல படும் 2 -12 -ல் பாவ கிரகம் இல்லாமல் இருந்தால் தான் பலன் தரும்.சனி ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளார் பாகை முறையில் புதன் சித்திரையில் உள்ளார்....

புத்திர காரகன் குரு இருப்பதும் செவ்வாய் நட்சத்திரத்தில் என்பது குறிப்பிட தக்கது

செவ்வாய்க்கு 2 மற்றும் 12-ல் சனி ராகு இருப்பது புத்திர தோஷத்தை கடுமையாக தந்து உள்ளது......அதை போல் செவ்வாய் தசை முடிவடைந்து தற்போது ராகு தசை நடைபெறுகிறது....

ஸ்.பார்த்தசாரதி, 9092521180

No comments:

Post a Comment