Thursday, November 20, 2014

ஒருவரின் ஜாதகத்தில் முக்கிய வேர்களாக இருப்பது ஒருவரின் லக்னம் பலம் பெற்று நல்ல நிலையில் அமர்ந்து இலக்கானதிபத்தி பலம் பெறுவது மிக முக்கியம்.லக்னம் வலிமையாக இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு வாழ்வில் ஏற்படும் ஏற்றம் இறக்கம் அனைத்தையும் திறம்பட கடந்து செல்லும் பக்கவமும் ஒவொரு நொடியும் அவரது வாழ்வின் போக்கினை அனுபவித்து வாழும் பாக்கியமும் ஜாதகனுக்கு என்ற தனி தன்மை கொள்ளுகை வைரக்கிய குணம் தலமை தாங்கும் பண்பும் உண்டாகும்.

அதை நேரம் அவரது வாழ்வில் வர கூடிய யோகத்தினை முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் சுகம் மற்றும் ரோகம் ஸ்தானதின் பலனை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுகம் ஸ்தானத்துக்கு 2-ம் இடமான 5-ம் இடம் பூர்வ புண்ணியம் தனஸ்தானம் பலம் பெற்றால் தான் இந்த பிறவின் சுகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் ரோகஸ்தானமான ஆறாம் இடத்துக்கு 12-ம் பாவம் நாம் அனுபவித்த சுகத்தை நோய்களாக எதன் வழியாக ஏற்பட போகிறது அதன் தன்மைய உணர்த்தும் இடம்

9-ம் இடம் லக்னம் மற்றும் 5-ம் இடத்துக்கு வலு சேர்க்கும் இரு தூண்கள் எனலாம் உண்மையில் ஒருவருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையாக இருந்தால் மட்டும் யோகத்தை தந்து விடாது அந்த யோகத்தை திறக்கும் சாவி 9-ம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளது

9--பலம் பெற வேண்டும் என்றால் அதருக்கு தன ஸ்தானமான 10-ம் இடம் பலம் பெறுவதும் தொடர்பு உண்டாவதும் ஜாதகருக்கு இந்த பிறவியின் கர்மாவை நிர்ணயம் செய்து அவர் வாழும் வாழ்வினை திசை காட்டும் கருவியாக செயல் படும் இடம் ஆகும்.இந்த இடத்தில் ஒருவருக்கு அமையும் கிரகத்தை பொருத்து வாழ்வின் சாராம்சம் அவரது ஆத்மாவின் தற்போதைய நிலை சுட்டி காட்டும்.......

பார்த்தாவின் பார்வை தொடரும் ......

No comments:

Post a Comment