Saturday, November 22, 2014

ஜாதகர் கேள்வி கேட்ட நேரத்தில் வந்தவரின் கேள்வி என்னவாக இருக்கு ?

இன்று மதியம் எமது நண்பர் அலைபேசியில் அழைத்து எனது மாமாக்கு தற்போது என்ன ஆகி இருக்கும் என்று கேட்டார்.எனக்கு புரியவில்லை என்ன ஆகி என்று சொல்லுக பார்ப்போம் என்றார்..நானும் இது போல் சவாலான விஷியதுக்கு சமைக்கோள் ஆருடம் கட்டத்தை தான் முதலில் பார்பேன்....

நான் ஆருடம் பார்க்கும் சமயம் மேஷம் ஆருட லக்னம் எப்பொழுதும் நடந்த சம்பவம் என்ன என்பதை சரியாக சுட்டி காட்டுவது ஆருடம் மட்டும் தான்..

உதயத்துக்கு எட்டில் ஆருடம்(கன்னி உதயம் ) உதயத்தில் புதன் 7-ல் பாம்பு 10-ல் சனி நாலில் செவ்வாய் எனோட பதில் உங்கள் மாமாக்கு உடல் ரீதியான பிரச்சனை அதவாது நரம்பு தொடர்பான பிரச்சனையில் அவதி படுவார் என்றேன்....கவிப்பு மூன்றில் குளிகனும் அதில் மன கஷ்டம் மன ரீதியான பிரச்சனைகள் இருக்கும் என்றேன்...

கேள்வி கேட்டவர் கேள்விக்கான பதில் ஆருடம் இருக்கும் இடத்தை வைத்து கணித்து விட்டோம் எட்டாம் எடம் விபத்து அவமானம் குறிக்கும்,.....ஆருடத்துக்கு எட்டில் கவிப்பு சந்திரன் குளிகன் இருப்பதும் விபத்து ஏற்பட்டு உள்ளது என்பதை காட்டுகிறது...

அடுத்து பிறந்த ஜாதக படி என்ன இருக்கும் என்று பார்கையில் விருச்சக லக்னம் மேஷ ராசி சந்திரன் தசையில் சுக்கிர புத்தியில் சனி அந்திரம் நடைபெறுகிறது...சந்திரன் கேதுவின் சாரத்தில் அமர்ந்து ஆறில் இருக்கிறார்.கேது எட்டில் சனி சேர்க்கை பெற்று எட்டில் இருக்கிறார்..

இப்போ நாம் பார்க்க வேண்டியது என்ன காரணம் கேள்வியின் சாராம்சம் என்ன
சந்திரன் ஆறில் உள்ளார் ..
புத்தி நாதன் மூன்றில் உள்ளார்
அந்தரம் நாதன் சனி எட்டில் உள்ளார்...
சனியின் செயல் பாடும் அதன் தன்மையும் அதிகம் தரும் கண்டிப்பாக விபத்து தான் ஏற்பட்டு உள்ளது......என்று நான் சொன்னேன் .......இரு முறையிலும் நான் பார்க்க காரணம் சுய ஜாதகத்தில் உள்ளது தான் சமைக்கோள் ஆருடம் பார்கையில் துல்லியமாக காட்டியது...

நண்பரின் பதில் சில நாளுக்கு முன்பு லிப்டில் ஏறி வரும் போது எதோ ஒரு பெல்ட் அவரது தோள்பட்டையில் பட்டு நரம்பு அறுபட்டு விட்டது என்றார்.....

No comments:

Post a Comment