Saturday, November 22, 2014

வைகோவின் அரசியல் எதிர்காலம் எப்படி ?

ம.தி.ம.க பொது செயலாளர் திரு.வைகோ அவர்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் இனி அவரது முதல்வர் கனவு பலிக்குமா ?வர இருக்கும் காலம் வசந்த காலமாக இருக்கமா என்பதை ஒரு சிறு அலசல் செய்து பார்க்கலாம்.....

மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அரசியல் அரங்கில் தனது கம்பிரமான பேச்சு திறனாலும் அசரடிக்கும் தன்மை உள்ளவர்
நேர்மைக்கு சிறந்த உதாரணம் என்றால் தற்போதைக்கு இவர் மட்டும் தான் உள்ளார் மாநில அரசியலில்...இவரது ஜாதகம் என்ன சொல்லுது...

ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள இவரது தன்மையானது நிலம் தத்துவும் ராசியான ரிஷபம் நட்சத்திர அதிபதி சூரியனின் தன்மையான நெருப்பு நிலம் நெருப்பு ரென்றும் கலந்த ஆக்ரோஷமான தன்மைய தரும்.இதில் சந்திரன் உச்சம் பெறுவது தனது தாய் மண் தாய் மேல் உண்மையான பற்றும் பாசமும் மிகந்த தண்மைய சுட்டி காட்டுகிறது.குறிப்பாக சூரியன் அங்கு சேர்க்கை பெறுவது வெளிபடையான குணமும் வீரம் உணர்ச்சி வசபடுதல் போன்ற குணம்களை தர உள்ளது..

இலக்கணம் ரிஷபம் அதில் சூரியன் சந்திரன் இருப்பது அமாவசை யோகம் உள்ள ஜாதகர்...இந்த யோகத்தின் தன்மை மறைமுக அதிகாரம் அரசியல் செல்வாக்கு பலம் வாழ்வின் பிற்பகுதியை யோகத்தை தரும் அமைப்பு இவை.
மூன்றாம் பாவாதிபதி சந்திரன் 1-ல் முலதிரிகோணம்  பெற்று சூரியன் சேர்க்கை பெறுவது எதிலும் வளைந்து கொடுக்காதா தன்மையும் முற்போக்கு சிந்தனையும் தர கூடியது...

வாக்கில் சனி அமர்ந்து செவ்வாயின் பாதையில் இருப்பது வக்கீல் தொழில் அமைந்தாலும் வழக்கு ஆடுவதில் வல்லவராக உருவாக்கி உள்ளது,அதை நேரம் சனி செவ்வாய் புதன் இந்த மூன்று காராக தன்மையில் இவரது செயல் பாடுகள் அமைந்து உள்ளது .எப்படி என்று பார்கையில் சனி தொழில் ஸ்தானதிபதி புதன் தொழில் காரகன் செவ்வாய் வீரியம் வேகம் தத்துவம் எதிரிகளை புடம் போடுவதில் வல்லவர் ...சனி செவ்வாயின் சாரம் என்பதால் குதர்க்க புத்தியும் ,தர்க்க செய்வதில் வல்லவராகவும் கடைசி வரை போராடும் மனோ வலிமையும் தந்து வீறு கொண்டு நடை போட வைக்கும் பல சிறப்புகள் இருந்தாலும் பல நேரங்களில் சனி வாக்கில் என்று சொல்லும்போது அதன் வேலைய செய்யாமல் இருக்காது சனி செவ்வாய் ரெண்டும் ஒருவகையில் ஏமாற்றும் கிரகம் எனலாம் தனது வாழ்வில் முக்கிய முடிவு எடுக்கும் தருவாயில் தவறான முடிவு எடுக்க வைத்து ஏமாற்றி விடும் அமைப்பு இது

மூன்றில் செவ்வாய் ராகு குரு சேர்க்கை கேக்கவே வேண்டாம் இதன் தன்மைகள் என்ன என்பதை குரு சாண்டலயோகமும் உள்ளது .........

அடுத்த பதிவில் மேலும் விளக்கம் வரும் ....

No comments:

Post a Comment