Sunday, December 14, 2014

நான் யார் -3

நான் யார் -3

ஜீவன் -------------------------------கர்மா

மனிதர்களில் ரெண்டு விதமான படைப்புகள் இங்க வாழ்கிறார்கள்.

ஒருவர் தன்னை யார் என்ற அடையாளமும் வெளிப்புற சக்தியும் மக்களை வசீகரிக்கும் தன்மையோடும் பேச்சு திறனில் தமது அறிவார்ந்த தத்துவம் மறைந்து இருக்கும் உலக ரகசியகளை மானிட பிறவிக்கு புரியும் வண்ணம் தான் தனது சரீர ரீதியான தேவைகளை பூர்த்தியாகும் வகையில் அவர்களது வாழ்வு இருக்கும்....

மற்றொரு வகையே சேர்ந்த ஆத்மாக்கள் தான் என்ற நிலையே கடந்து இந்த உலகத்தின் பிரமாண்டம் கவர்ச்சி நிலை கொள்ளாத மாறுப்பட்ட செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் தான் யார் என்ற நிலைய அறியாமல் தன்னுள் வெளிப்படும் சக்தி பிரவாகத்தை விதையாக விதைத்து பல வருடத்துக்கான செயல்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் தெரியமால் செய்வார்கள் பல ஆத்மாக்கள் இன்றும் செய்து கொண்டுள்ளது......

நான் மேல் சொன்ன ஆத்மா தனது சக்தியே நிகழ்காலத்தில் தன்னை நாடி வரும் ஆத்மாக்கு நேரடையாக தந்து அவர்களின் தற்கால தேவைக்கான ஆன்மிக பசியனை தீருக்கும் நிலையோடு உள்ளனர்.இவர்களை நாடி செல்லும் மக்கள் நிச்சயம் மன அமைதியும் சாந்தமும் ஆன்மிக விழிப்புணர்வும் பெறுகிறார்கள்......காலம் கடந்தும் இந்த பூமியில் பேச படுகிறார்கள்....இவர்கள் ஜீவனின் கர்மாவை உணர வைக்கும் ஆற்றல் உடையவர்கள்

யாம் சொன்ன அடுத்த வகை ஆத்மாக்கள் தன்னை யார் என்று காட்டி கொள்வதும் இல்லை.அவர்களுக்கு தந்த வேலையே மனிதர்களின் மனிதராக பல யுகத்துக்கான வேலையே செய்யும் நிலையோடு வருகிறார்கள்.இவர்களின் அடையாளம்காலம் கடந்து பேச படுவது இல்லை . இயற்கைய நேரடையாக சீர் அமைத்து காலத்தை கடந்து நிற்கும் பணியே செய்வார்கள் .....

முதல் வகையே சேர்ந்தவர்கள் கர்மாவுக்கு உட்பட்டவர்கள் ...

ரெண்டாவது வகையே சேர்ந்தவர்கள் கர்மாவுக்கு அப்பால் உள்ளவர்கள்.......

No comments:

Post a Comment