Tuesday, January 20, 2015

நீச்ச பங்கம் அதன் விளைவுகள்

நீச்ச பங்கம் தொடர்ச்சி ......

சிம்ம லக்னம் என்று சொல்லி இருந்தேன் செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை ஆகி நீச்சபங்கம் என்பதால் யோகத்தை தந்தாலும் நீச்சம் என்றால் நீச்சம் சேதம் ஆகாமல் எந்த ஒரு பொருளும் முழுமை பெற முடியாது அது தான் விதி அந்த விதி நீச்சம் பெறும் கிரகத்துக்கும் உண்டு...

9-ம் அதிபதி செவ்வாய் 12-ல் நீச்சம் பெற்ற காரணத்தால் தந்தையே இழந்தார் சிறு வயதில் அடுத்து தாய் காரகன் சந்திரன் நான்கில் அமர்ந்து இருப்பது தோஷம் எனபதும் அதில் சந்திரன் நீச்சம் பெறுவதும் நாலாம் அதிபதி செவ்வாயும் மறைவதும் தாயையும் இளமையில் இழந்து விட்டார் ஜாதகர் ....

தாய் தந்தை அரவணைப்பில் இல்லாமல் உறவினர்கள் அரவணைப்பில் தான் வளர்ந்து வருகிறார் .........

நீச்சம் கிரகம் எப்பொழுதும் ஒன்றை விழுங்கி ஒன்றை தரும்...........அதை போல் இங்க குரு நீச்சம் என்பதால் பூர்விக சொத்துக்கள் இல்லை இருப்பினும் அவர் வளர்துவரும் உறவினர் வழியில் சுகபோகத்தை அனுபவித்து வருகிறார் ...

No comments:

Post a Comment