Wednesday, January 21, 2015

நோயும் தன்மையும்

பணம் இல்லாமல் உலகில் வாழ்ந்து விடலாம் நோய் இல்லாமல் வாழ முடியாது என்ற அனுபவத்தினை நாம் அனுபவத்தில் கண்டு வருகிறோம்..

ஒருவரின் ஜாதகத்தில் இருக்கிற 12 கட்டம்களும் 27 நட்ச்சத்திரகளும் நமது உடலின் உடல் கூர்களை பங்கு போட்டு அதன் மேல் அமரும் கிரகத்தின் படி நமது நோயினை அனுவித்து வருகிறோம்.

மனதின் தன்மையும் என்னம்களை பொருத்தும் நோய்களும் உண்டாகிறது .நமது மனோகாரகன் சந்திரன் உடல் காரகன் சந்திரன் தான் வருகிறார் சந்திரனின் பலத்தை வைத்து தான் நமது நோய் எதிர்ப்பு திறனும் அதில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற்று விடு பெற முடியும் ...

நமது லக்னம்என்னும் உயிர் ஆத்மா நிலையே நமது மனோசக்தியே நிர்ணயம் செய்கிறது.

6-ம் பாவம் அதன் அதிபதி எங்கு எல்லாம் சம்பந்தம் பெறுகிறதோ அங்க இடத்தின் தன்மை அந்த பாவத்தின் உறுப்புகள் பாதிக்கபடும் அதை போல் பாவத்தில் அமரும் கிரகமும் ஒருவருக்கு நோய் தருவதில் முக்கியத்துவம் பெறுகிறது ...

ஆறாம் அதிபதி தனது பகை வீடுகளில் அமரும் போதும் பகை கிரகத்தின் பார்வை சேர்க்கை பெறும் வேளையில் பாதிப்பை அதிக படுத்துகிறது ....

உதாரணம் ---

10-ம் வீட்டில் சனி செவ்வாய் சம்பந்தம் பெற்றால் அந்த வீட்டின் உறுப்பான முழம்கால் பாதிக்கபடுகிறது .....

அடிக்கடி முழம்காலில் பாதிப்புகளும் வயதுக்கு ஏற்றபோல் பிரச்சனை உண்டாகிறது சிலருக்கு தசை புத்தி சரி இல்லாமல் வரும் நேரம்களில் கோட்சாரம் சரி இல்லை என்றால் விபத்துகளும் உண்டாகி அதனால் கடைசி வரை வேதனை பெறும் நிலையும் ஏற்படும்

2 comments: