Monday, January 12, 2015

பிரகாசத்தின் மறுபக்கம்


நேரம் கிடைக்கும் சமயம் பக்கத்தில் இருக்கும் கடற்கரையில் மாலையில் நடைபயணம்  சென்று வருவதும் அங்க இருக்கும் அழகிய இயற்கை அழகை ரசிப்பதும் எனது புத்துணர்ச்சியா அதிகபடுத்தி கொள்ள மிகவும் உதவி செய்யும் இடமாக எமது ஊரின் அருகில் உள்ள சிங்கரதொப்பு கடல்கரைய ரசிப்பது எமது வழக்கம்...

பொதுவாக அங்க எமது நண்பர் ஒருவர் என் கூட வருவார்....மூன்று நாட்களுக்கு முன்பு அவர் வரவில்லை நான் மட்டும் தனியாக அங்க நடைபயணம் செல்லலாம் என்று முடிவு எடுத்து சென்று கொண்டு இருந்தா போது எமது கண்ணில் மிகவும் வயதான முதியவர் ஒருவர் தியானத்தில் அழ்ந்த நிலையில் முழுகி இருந்தார் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ரொம்ப அழுக்கான உடையில் மிகவும் அழ்ந்த நிலையில் தன்னை மறந்து இருந்தார் சற்று அவர் முகத்தை பார்த்த போது எதோ ஒரு பிரகாசம் இருப்பதை உணர்ந்தன் மீண்டும் நடை பயணம் முடிந்த கொண்டு வரும் பொது வெகு தொலைவில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்....

ரெண்டு நாள் கழிந்து எமது நண்பர் நானும் கடற்கரையில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கையில் அவரை பற்றி சொல்லி இருந்தேன்..யார் அவர் தெரியவில்லை ஒருவரை இங்க பார்த்தேன் என்று ...சிறிது நேரத்தில் அவர் கடல் கரையில் நடந்து கொண்டு வரும்போது கடலில் இருக்கும்  தண்ணீர் எடுத்து வாய் கொப்பளித்து கொண்டு இருந்தார்..எமது நண்பரிடம் அவர் தான் அது அவரிடம் பேச வேண்டும் போல் உள்ளது ....என்றேன் வேறு ஒரு நாள் பேசலாம் என்றார்...

இன்று மாலை நாங்கள் செல்லும் போது அவராகவை எங்களை பார்த்து ஹாய் என்று கை காட்டினர் நாங்களும் காட்டிவிட்டு திரும்பி வரும்போது அவரிடம் சென்று பேசினோம்...பல விஷயம்கள் சொன்னார் தியானத்தை பற்றி கேள்வி கேட்டேன் அதை பற்றி விளக்கம் தந்தார்....

சிறிது நேரத்தில் அவருக்கு 20 நாளுக்கு முன்பு ஹார்ட் அட்டக் வந்ததும் சிரமத்தையும் சொன்னார் பிறகு விளக்கமும் சொன்னார் .....அவரது மகன் மூன்று மாதத்துக்கு முன்பு பைக்  விபத்தில் இறந்து விட்டார் முத்த மகன் என்றும் தன்னால் அதில் இருந்து மீண்டு வர முடியாத மன சுமையால் தவிக்கிறான் என்று கண் கலங்கிய படி பேசினார்...நானும் அவருக்கு ஆறுதலாக பல விஷயம் ஆன்மிக ரீதியில் பேசினான்..இருந்தாலும் அவரிடம் எதோ ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தாலும் அதை அவர் உணர முடியாத நிலையில் உள்ளார் .....சென்ற வருடம் அவரது மருமகள் தூக்கு போட்டு இருந்து விட்டால் .......அவரது 10 வயது பேரன் 1 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டான் என்று மனம் கலங்கி பேசினார் அவருக்கு வயது 74 என்றார்....இருந்தாலும் என்னால் எனது வயதுக்கு உட்பட்டு எதோ ஒரு மனரிதியான சில வார்த்தைகள் சொன்னேன்....அவரிடம் பேசும்போது எங்களை நாங்கள் மறந்து ஒரு அழமான இனம் புரியாத வகையில் அதிர்வுகளோடு அங்க இருந்து பேசிவிட்டு வந்தேன்...

அவரது மகனின் ஜாதகத்தை பதிவு செய்கிறான் பார்க்கவும்

எனக்கு பல இடம்களில் இப்படி பட்ட மனிதர்களை சந்திக்கணும் என்று தோன்றுகிறது பேசுகிறான் .......மறைகிறான் ...அனால் எதோ ஒன்றை  யாம் பெற்று  அவர்களிடம் தந்துவிட்டு வருகிறான் .... 

No comments:

Post a Comment