Sunday, March 1, 2015

விபத்தும் தசையும்


எதிர்பாராத விபத்தால் மரணம்

 மீனம் லக்னம் விருச்சக ராசியில் பிறந்துள்ள பெண் 2004-ம் வருடம் எதிர்பாராத விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.நாம் ஒரு ஜாதகத்தை கையில் எடுக்கும்போது ஜாதகம் பலம் உள்ளதா ? பலம் அற்றதா என்று பல வகையில் ஆராய்ந்து பார்ப்போம்...

யோகம் பலம் உள்ளதா ?ஆயுள் உள்ளதா ஆயுள் இருந்தால் மட்டுமே யோகத்தை அனுபவிக்க முடியும் என்னும் போது ஆயுள் பலம் மிக முக்கியம் நாம் இங்க ஜீவித்து இருக்கா...

பெண்ணின் ஜாதகத்தில்  அஷ்டமாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளது*
ஆறாம் அதிபதியான ரோக ஸ்தானதிபதி சூரியன் உச்சம் பூர்வ புண்ணிய அதிபதி சந்திரன் 9-ல் நீச்சம்*


லக்னதிபதி மற்றும் ஜிவன கர்மாதிபதியான குரு 4-ல் உள்ளார்....

நேற்றயா எனது பதிவில் எழுதி இருந்தேன் லக்னத்தை விட ஆறாம் இடத்து அதிபதி பலம் பெற கூட இங்க சூரியன் உச்சம் பெற்று அஷ்டமாதிபதி சுக்கிரன் நட்ச்சத்திரம் பெற்று வலிமையாக உள்ளார்...

ஒருவர் ஜாதகத்தில் தூண்கள் எனப்படும் 1-4-7-10 மற்றும் கோணம்கள் எனப்படும் 1-5-9 - ம் அதிபதிகள் பலம் பெறாமல் 6-8-12-ம் இடத்து அதிபதிகள் பலம் பெற்றால் ஒருவனின் வாழ்வில் தசை புத்திகள் சரி இல்லை என்றால் எதிர்பாராமல் விபத்து நோய் என்று போராடும் நிலை உண்டாகும்....

விபத்து நடைபெற்ற காலம் புதன் தசையில் சூரிய புத்தியில் கேது அந்தரம் சனியின் சூட்சமா அந்தரத்தில் சம்பவம் நடந்தது..

முதலில் தசை நாதன் புதன் பாதகத்திபதி தசை என்பதை பாதிப்பை தரவல்லது புதன் நின்ற நட்ச்சத்திரம் அஷ்டமா அதிபதியாகிய சுக்கிரனின் நட்ச்சத்திரத்தில் உள்ளார்..புதன் தசை இவருக்கு பாதகமான தசை தான் அஷ்டமா அதிபதி 1-ல் அமர்ந்து இருப்பது முடிந்த வரை ஜாதகிக்கு கண்டமும் நோயும் முடக்கத்தை ஏற்படுத்தா தான் முன்னிலை வகித்து செயல்படும்..

இங்க முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விஷியம் விபத்து என்றால் 4-8-12 -ம் பாவம்களின் சம்பந்தம் தான் செயல்படுத்தும் ...இங்க தசை நாதனுக்கு புதன் நின்ற அதிபதி சுக்கிரன் +சுக்கிரன் நின்ற அதிபதி சனி ஆகிய மூன்றும் தொடர்பு கொள்ளுகிறது ...


விபத்து நடந்த நாள் அன்று  கோசாரமும் பாதகமாக இருந்ததால் மரணம் ஏற்பட்டது எப்படி என்பதை பார்ப்போம் ///

அன்றைய நாளில் கோசார சனி செவ்வாய் லகனதுக்கு நாலாம் வீட்டில் உள்ளனர்

கோச்சர சந்திரன் பிறப்பு ராகு மகரத்தில் பிறப்பு ராகுவே நோக்கி சந்திரன் செல்கிறது அதை போல் கோச்சர ராகு 15டிகிரியில் மேஷத்தில் உள்ளார் அங்க தசை நாதன் பிறப்பு ஜாதகத்தில் 15 டிகிரியில் உள்ளனர்..

மொத்தத்தில் ஒருவருக்கு அஷ்டமா தசை பாதக தசை விரயாதிபதி தசை வந்தால் கோச்சரம் பலம் இல்லாமல் தசை நாதனுக்கு சாதகமாக கெடுதலாக இருந்தால் ......பிரச்சினை தந்து விடுகிறது ......

என்பது அனுபவ உண்மை......நன்றி  

No comments:

Post a Comment