கிரக சேர்க்கையும் குணம்களின் வெளிதன்மை உள்தன்மை
லக்னம் என்ற முதல் புள்ளியும் அவை நின்ற நட்ச்சத்திரம் நமது குணயியல்புகளை தெரிவிக்கும் நமது எண்ணம் கனவு சிந்தனை லட்சியம் கோபம் வேகம் பொறமை பிறவி குணம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது லக்னத்தில் அமரும் கிரகம் நம்மை இயக்கும் முதன்மை கர்த்தாக்கள் கோள்கள் மற்ற இடம்களை விட அமரும் கிரகம்களை நமது குணம்களை ஆக்கிரமித்து வெளிமுகமாகவும் உள்முகமாகவும் காட்டும்....
ஒருவரின் லக்னத்தில் அதன் அதிபதியோடு லக்னம் இலக்கானதிபதி அமரும் நட்ச்சத்திரம் முக்கிய விளைவுகள் எப்படி ஏற்படுத்தும் பார்க்கலாம் ...
சூரியன் நட்ச்சத்திரத்தில் அமர்ந்தால் ஜாதகனுக்கு தான் என்கிற ஈகோ அதிகமாக இருக்கும் அரசியல்துறையில் ஈடுபாடு தரும்.தன்னை பற்றிய அதிகம் கற்பனை செய்து கொள்ளுவார்கள் மற்றவர்கள் தன்னை புகழை வேண்டும் என்கிற மனப்பான்மையோடு வாழ்வார்கள்...
சந்திரனின் நட்ச்சத்திரத்தில் இருப்பின் அவை வளர் பிறை சந்திரன் தேய்பிறை சந்திரனா என்பதை பொருத்து ஜாதகரை இயக்குவார்.தனிப்பட்ட திறமைகள் உள்ளவர் குறிப்பிட்ட கலையில் வல்லவராக இருப்பார்.தாயின் அன்பும் தன்னை தானே ஆறுதல் படுத்தி கொள்ளும் மனப்பான்மை பேசுவதில் ஆர்வம் உள்ளவராக இருப்பர் இவர்களுக்கு என்ற லட்சியம் எதுவும் இல்லாமல் காலத்துக்கு தகுந்தற்போல தன்னை வளைத்து செல்லும் பக்குவமும் இவர்கள் நிற்கும் இடத்தை வைத்து இலட்சியத்தை நிர்ணயம் செய்வார்கள்.தேய்பிறை சந்திரனால் திருட்டுதனம் அதிகமாக இருக்கும் தனக்கு வேண்டியவைகளை அடைய திருட்டு தனம் செய்து தற்காலிக இன்பம் கண்பார் எனலாம் ....இவர்கள் காலத்துக்கு தகுந்தற்போல் இலட்சியத்தை அமைத்து கொள்ளாமல் அதனால் கஷ்டகளை வேதனைகளை அனுபவிப்பார்...........நன்றி ........தொடரும் ...
Thank you. Eagerly expecting other star karaka's chararecters
ReplyDelete