Wednesday, March 11, 2015

ரியல் எஸ்டேட் தொழில்



ரியல் எஸ்டேட் தொழில் 


ரியல் எஸ்டேட் தொழில் ஒருவருக்கு சிறப்பாக அமைய வேண்டுமானால் பூமி காரகன் செவ்வாய் பலமாகவும் தொழில் காரகன் சனி பலத்தோடும் கமிஷன் மற்றும் தரகுக்கு அதிபதியான புதன் பலம் பெறுவது அவசியம்.செவ்வாய் சனி புதன் இன்முன்று கிரகமும் சம்பந்தம் பெற்றால் மட்டுமே ரியல் எஸ்டேட் தொழில்
செய்து பணம் சம்பாதிக்க முடியும்...

எந்த மாதுரியான கிரக சம்பந்தம் இருந்தால் தொழில் செய்யலாம் பார்க்கலாம்-

செவ்வாய் புதன் சேர்க்கை சம்பந்தம் பெற்றால் காலி மனைகளை வாங்கி விற்கலாம்

செவ்வாய் சனி சம்பந்தம் சேர்க்கை பழைய வீடுகளை வாங்கி விற்றால் லாபம் பார்க்கலாம்

செவ்வாய் சுக்கிரன் புதியதாக கட்டிய வீடுகள் அபார்ட்மெண்ட்கள் சொகுசு பங்களாக்களை வாங்கி விற்பதால் யோகத்தை தரும்...

செவ்வாய் சந்திரன் தொடர்பு நீர் நிலைகள் ஆறுகள் குட்டைகள் அமைந்துள்ள இடம்களில் உள்ள இடம்களை மனைகளாக பிளட் போட்டு விற்ப்பார்கள் அது போன்ற இடத்தை விட்டால் யோகம் தரும்.அது போல் வாடகை வீடுகளை இடம் காட்டி கமிசன் வாங்கும் தொழிலும் சிறப்பாக இருக்கும்...

செவ்வாய் சூரியன் தொடர்பு புறம்போக்கு நிலம்களை கையேகபடுத்தி அரசு துறையினை தனக்கு சாதகமாக ஆக்கி அதை விற்பதால் நன்மை தரும்..குறிப்பாக அரசு அதிகாரி மற்றும் அரசியல் வாதிகளை வைத்து கோடிகளை அள்ளும் யோகம் தரும்....

நன்றி...Fortune parthasarathy -------


No comments:

Post a Comment