Sunday, April 19, 2015

விபத்து முதல் பகுதி

எமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வேலை நிமிர்த்தமாக துபாய் சென்று ரெண்டு வருடம் கழித்து சொந்த நாட்டுக்கு வந்தார்.அங்க வேலையில் இருந்து அலர்ஜியால் தலையில் முடி எல்லாம் கொட்டி விட்டது..
அவருக்கு பெண் பார்க்கும் படலம் வீட்டில் மும்முரமாக நடந்தது,ஜாதகருக்கு தனது தலையே பற்றியே கவலை பல நண்பரிடம் ஆலோசனை செய்து புதுசேரியில் உள்ள ஒரு இடத்தில் தலையில் மூடி நட்டு முடி முழுமையாக இருப்பதாக தெரியும்..அதை பற்றி விசாரிக்க அவரது நண்பர்களை அழைத்து செல்ல வந்துள்ளார்.அவர் அழைத்து செல்ல வந்த நண்பர் வேறு வேலை காரணமாக போக முடியாத நிலையால் அங்க அமர்ந்து இருந்த மற்றொரு நண்பரே நீ சும்மா தானே இருக்க வா சென்று வரலாம் என்று அழைத்து சென்றுள்ளார்..
சரியாக வண்டியில் சென்ற அரை மணி நேரத்தில் எதிரா குடித்து விட்டு வந்த வாகனம் இவர்கள் மேல் மோதி அதை இடத்தில் அவருக்கு துணையாக சென்ற நபர் இறந்துவிட்டார்.....முடி பிரச்சினைக்கு சென்றவருக்கு கை கால் முட்டு ஒரு கண் இடுப்பு எலும்புகள் அனைத்தும் நொறுங்கி நான்கு வருடமாக படுத்த படுக்கையாக உள்ளார்...

அவர் ஒட்டி சென்ற வண்டி சிகப்பு நிறம் வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை....ஏன் நான் இதை எல்லாம் கதை போல் எழுதி உள்ளேன் என்றால் காரணம் உள்ளது ஒரு மனிதனின் வாழ்வில் நொடிகள் யாவும் ஒன்பது கிரகத்தின் செயல்பாடுகள் மட்டுமே அவற்றை மீறி நாம் எதையும் யோசித்து விட முடியாது ....தொடரும்

No comments:

Post a Comment