Saturday, May 9, 2015

அம்மா வழக்கு


முன்னாள் முதல்வர் செல்வி-ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை பற்றி ஜோதிட கடல் ஒருவர் கேட்டதுக்கு இணங்க எழுதுகிறேன்....
1996, டிசம்பர் மாதத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போயசு கார்டனில் உள்ள செயலலிதாவின் வீட்டை வண்ண தொலைக்காட்சி வழக்கிற்காகசோதனையிட்டு நகரும் சொத்துக்களான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 சோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்பு மிக்க பொருள்களைக் கைப்பற்றினர்....
அன்றையே ராகு தசை சுய புத்தியில் சந்திரன் அந்தரத்தில் வழக்கே சந்தித்து அவதி பட்டு வந்தாலும் ராகு தசை சுயபுத்தியில் அவமானம் தந்து குரு புத்தியிலும் 1997 வரை ராகு புத்தி அதன் பிறகு குரு புத்தியும் சனி புத்தியும் தற்போது உள்ள நிலைகளை இருந்தது மீண்டும் கேது புதன் சுக்கிரன் புத்தி முதல்வராக ஜொலிக்கும் வாய்ப்பே பெற்றார் ....
இந்த முறையும் அதை போன்ற நிலையே உண்டாக்கி உள்ளது எனலாம் எப்பவும் தனது தசையில் சுயபுத்தி யோகம் தராது அதையும் மீறி யோகம் ஏற்பட்டால் மிக பெரிய சரிவு ஒன்று ஏற்படும் என்பதே விதி...அதன் வகையில் அம்மாவுக்கு ராகு தசையில் அன்று சில யோகம்கள் அனுபவித்த காரணத்தால் ராகு புத்தி முடியும் தருவாயில் பிரச்சினையே தந்தது....
இந்த முறை 2011 செப்டம்பர் மாதம் மீண்டும் ராகு தசை செவ்வாய் புத்தியில் ஆட்சியே பிடித்த காரணத்தால் குரு தசை சுயபுத்தி அசுர வளர்ச்சி பாராளமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றி வாய்ப்புகள் என்று அனைவரும் பார்த்து வியக்கும் அளவு யானை பலம் வந்தது.சுயபுத்தி மிக அதிக படியான யோகத்தையே செய்து விட்டது எனலாம் அதன் பலன் பாதகம் நீண்ட நாளாக இருந்து வந்த வழக்கு அஷ்டமா புத்தியான சனி புத்தியில் முடிவுக்கு வந்தது பதவியே இழந்தார் சிறைவாசம் சந்தித்தார்....
குரு கேதுவின் நட்ச்சத்திர சாரம் கேது குருவின் சாரம் என்ற ரீதியில் நெருக்கடியும் தான் செய்த மறைமுகமான செயல்களை சிறுமைபடுத்தி இருப்பதை பிடுங்கி ஞானத்தை தந்துள்ளது என்பதே உண்மை...இதறுகு முன்பு அம்மாவின் செயல்கள் அவரது நிலை பாடுகள் சிந்தனைகள் அனைத்தும் மாறி தனக்கு என்ற பற்று பொருள் சேர்க்கை பணத்தின் மேல் ஆசை இவற்றை எல்லாம் ஒதுக்கி உண்மையான சேவை மனப்பான்மை மக்களுக்கு நன்மை செய்து அழிய புகழ் பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே வர்களின் மனதில் உண்டாகும் முக்கியமாக அவரது நண்பர்கள் சகவாசம் அனைத்தையும் ஒதுக்கி இருந்தால் நிச்சயம் குரு சுக்கிர புத்தியில் மீண்டும் ஆட்சியே பிடித்து நாட்டை ஆளும் தகுதி பெறுவார்...
தற்போது உள்ள நேரத்தின் படி அவருக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்பதில் மாற்றம் இல்லை மிகவும் பாதகமான நேரம்வருகிற 2016 டெசம்பர் வரை.....

No comments:

Post a Comment