Saturday, May 9, 2015

சுக்கிரனும் சுக வாழ்வும்


நேற்று நண்பர் ஒருவர் அவரது நண்பரே பார்க்க அழைத்து சென்றார் ஜாதகம் பார்க்க வயது மிக குறைவு வெறும் 24 வயதே ஆகிறது.ஆனால் இந்த வயதில் எந்த விதமான பக்கபலமும் துணையும் அல்லாமல் தனது சுய முயற்சியால் விளம்பரம் நிறுவனம் ஒன்றே ஆரம்பித்து தனி ஒரு நபராக சிறப்பாக நடத்தி வருகிறார் இவருக்கு கிழ் பத்து பெண்கள் வேலை செய்கிறார்கள்....
5-வருட காலத்தில் சொந்த வீடு சொத்துக்கள் என்று ஒரு சாராசரி நபரின் ஆசைகள் கனவுகள் அனைத்தையும் அடைந்து விட்டார் எனலாம்.அந்த அளவு சுகபோகமான வாழ்வு வாழ்கிறார்...சரி இதறுகு எல்லாம் எந்த கிரகத்தின் யோக நிலை காரணமாக இருக்கும் என்றே யோசனையில் சென்றேன்...
ஜாதகத்தை பார்த்தவுடன் கன்னி லக்னம் முலம் நட்ச்சத்திரம் சுக்கிர தசா வருகிற மார்ச் மாதம் வரை உள்ளது..உண்மையில் சுக்கிர தசை ஒருவனுக்கு வேலை செய்தால் அதுவும் குட்டி சுக்கிரன் எப்படி பட்ட வாழ்வினை தருவார் என்பதை என் அனுபவத்தில் நேரில் சென்று பார்த்த பிறகு தெரிந்து கொண்டேன்..
சுக்கிரன் தசை எல்லாருக்கும் யோகத்தை தந்து விடுமா என்றால் இல்லை பெரும்பாலான மக்கள் கஷ்டமும் வேலை இல்லாமல் அவதி பெறும் நிலையும் ஏற்படுத்தி விடுகிறது...சில மனிதருக்கு மட்டுமே ராஜயோகமாக வேலை செய்கிறது.இவரது ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை மூன்றாம் வீட்டில் அமையே பெற்று தர்மக்கருமாதி யோகத்தை மிக வலுவாக பெற்றுள்ளது .சுக்கிரன் நின்ற நட்ச்சத்திர நாதன் சனி பூர்வ புண்ணியாதிபதி ஆகி ஆட்சி பெறுவதும் பலமிக்கதொரு யோகம் தந்து உள்ளது..
இந்த யோகம் சமுதாயத்தில் மிக உயந்த பதவிகள் புகழ் செல்வாக்கு அனைத்தும் தேடி வரும் அமைப்பு...லக்னம் பலம் .பூர்வ புண்ணியம் பலம் பாக்கியம் மற்றும் ஜீவனம் பலம் இவை எல்லாம் பலம் என்பது ஜாதகனை என்றைக்கும் சாதாரண நிலைக்கு தள்ளி விடாது..
நான்காம் இடத்தில் செவ்வாய் சூரியன் சந்திரன் ராகுவும் சூரியன் குரு பரிவர்த்தனை என்பது தாய்க்கு சிறப்பும் இல்லை யோகமும் இல்லை அப்படி இருப்பினும் இவரது தாய் மிக நல்ல நிலையில் உள்ளார்கள்.தாயினால் கிடைக்க வேண்டிய அத்தனை சுகங்களும் அன்பும் உள்ளது அவர் தான் ஜாதகனுக்கு மிக பெரிய சப்போர்ட் ஆக உள்ளார் ....

ஜோதிடர்களின் கோணம் இவை தோஷமாக தென்படும் அவை இல்லாமல் யோகமாக உள்ளது .....ஆனால் சொன்ன பலன்கள் என்ன அடுத்த அலசல் எழுதுகிறேன்

No comments:

Post a Comment