Saturday, May 9, 2015

இங்கிலாந்த் தேர்தல்


ஒருவர் வெற்றி பெறகிறார் என்றால் வெற்றிக்கு முன்பு சில காரணம்களையும் சொல்லி விட முடியும் ...வெற்றிக்கு பின்பு பல காரணம்களை சொல்லி கொண்ட இருக்கலாம் ...
தோல்வி பெறுபவரின் நிலையோ அதை விட மோசமாகவும் வெற்றிக்கு முன்பு அவரது பலமாக கருதிய விஷயம் யாவும் உடைந்து அதையே பலவினமாக பேசி மனநோக வைக்கும் உலகம் இது.....
இங்கிலாந்து தேர்தலில் எதிர்கட்சி தலைவர் தோல்வி அடைந்தார்.....
ரிசப லக்னம் மிதுன ராசியில் பிறந்து உள்ளார் தற்போது நடைபெறும் தசையானது புதன் தசையில் செவ்வாய் புத்தியில் குரு அந்தரம் .புதன் தன் சுய நட்ச்சத்திரத்தில் அமைய பெற்று எட்டாம் இடத்திலும் புத்தி நாதன் குரு ஆறாம் இடத்திலும் செவ்வாய் 10-ல் ராகுவின் நெருங்கிய பாகையில் உள்ளது
சந்திராதி யோகம் சந்திரனுக்கு 7-ல் மூன்று கிரகமும் லக்னத்துக்கு எட்டில் மூன்று கிரகமான சூரியன் புதன்சுக்கிரன் அமைய பெற்று தசையும் நடைபெறுகிறது இவை வலிமையான யோகத்தை தந்து அரசியலில் உயர் பதிவி மரியாதையை சுகபோகம் அனைத்தும் தரும்..இதில் புதன் வர்கொதமம் அடைந்து இருப்பது சிறப்பான ராஜயோகம் எனலாம்...
ஒரு நாட்டின் பிரதமராக இவர் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பும் ஆட்சி அமைக்கும் வல்லமையும் தந்து விடுமா என்று பார்த்தால் அங்க தான் இடிக்கிறது..தசை ஒத்துழைப்பு இருப்பினும் அன்றே கோட்சாரமும் சாதகமாக இல்லை என்றால் வெற்றி என்பது நமது வசம் ஆகாது...
குறைந்தது தசை நாதன் புத்தி நாதன் அந்தர நாதன் ஏதேனும் ஒரு கிரகத்தையாவது குரு பார்வை இருந்தால் மட்டுமே வெற்றி ஒரளவு வசமாகும் இல்லாத பட்சத்தில் கடினமே.
தேர்தல் நடந்த அன்று மனோகாரகன் சந்திரன் நீச்சம் கோட்சாரத்தில் அன்று சந்திரன் நீச்சம் என்றால் இவரது ஆளும்க்கட்சி தலைவருக்கு அதுவே லக்னம் எனலாம் விருச்சகதுக்கு சந்திரன் பாக்கியாதிபதி செவ்வாய் அதருக்கு நேர் ஏழில் இருப்பது நீச்சம் பங்கமும் குரு பார்வை இருப்பதும் ஆளும்கட்சி தலைவருக்கு வெற்றி வாய்ப்பும் யோகமும் தந்து விடும் ...
எதிர்கட்சியான இவரது எண்ணம் செயல் அனைத்தும் காணல் நீராக போகும் நிலையே சுட்டி காட்டிவிட்டது...
தேர்தல் ஓட்டு எண்ணிகை நடைபெற்ற அன்றும் சந்திரன் இவரது லக்னத்துக்கு எட்டில் மறைவு அதை நேரம் ஆளும்கட்சி தலைவருக்கு பாக்கியத்திபதி சந்திரன் குரு பரிவர்த்தனை உள்ளது.....அவருக்கே சாதகமாகவும் அமைந்து விட்டது வெற்றி

அந்தர நாதன் குரு அஷ்டமா அதிபதி என்பதும் இவரது தோல்விக்கு முக்கிய காரணம்.......

No comments:

Post a Comment