Friday, July 31, 2015

ஜாமைக்கோள் பிரசன்னம் அனுபவம் -1


ஜாமைக்கோள் பிரசன்னம் அனுபவம் -1

இன்று காலை நண்பர் ஒருவர் தாம் வைத்து இருந்த பணம் ஓட்டலில் காணாமல் போய்விட்டது நிச்சயமாக தெரியும் புதியதாக வேலைக்கு வந்த நபரே எடுத்து விட்டது சென்றதாக சொன்னார் அந்த பணம் கிடைக்குமா அல்லது காவல் நிலையம் சென்று புகார் தரலாமா ?

எமது பதில்கள் நிச்சயம் உங்கள் பணம் கிடைக்கும் காவல் நிலையம் சென்று புகார் தெரிவிக்கலாம் நீங்கள் சந்தேகம் படும் நபர் மேல் என்பதை சொல்லி முடித்து கொண்டேன்.சில மணி நேரத்தில் மீண்டும் போன் செய்தார் பணம் கிடைத்து விட்டது ஆனால் பணத்தை யாரும் எடுக்கவில்லை தாம் தான் நாபக மறதியில் வேறு இடத்தில் வைத்து விட்டேன் கவன குறைவாக இப்பொழுது காவல் நிலையத்துக்கு தகவலும் தெரிவித்து விட்டேன் என்று முடித்து கொண்டார்...


உண்மையில் அவருக்கு பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது எனக்கு குழப்பம் ஆரம்பித்து விட்டது என்னிடம் பிரசன்னம் பார்க்க வந்தார் பணம் களவு போய்விட்டது என்று சொல்லும் போதே நான் அந்த பணம் திருடு செல்லவில்லை அங்க தான் உள்ளது என்பதே தீர்க்கமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்...நான் சொன்னது போல் பணம் கிடைத்து விட்டு என்பது வேறு கதை இதை எப்படி விட்டுவிட்டேன் !!!!!!!!!!!!

உதயம் துலாம் ஆருடம் ரிஷபம் கேள்வி கேட்டவர் சரியான பிரசன்னம் வருகிறது ஏன் என்றால் ஆருடம் எட்டு என்று சொல்லும் போதே எட்டாம் இடம் என்பது திருட்டே குறிக்கும் இடம் களவு யார் செய்து இருப்பார்கள் என்பதை அறிய வேண்டுமானால் கவிப்பின் நிலையும் கவனிக்க வேண்டும் கவிப்பு இருப்பது 12-ல் சந்திரன் நட்ச்சத்திரம் உதயம் மற்றும் ஆருடத்திபதி சுக்கிரன் நீச்சம் கவிப்போடு இதுவே கேள்வி கேட்டவரின் பலவீனமே என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டேன்

உதயத்தை கடந்தே கவிப்பு சென்று உள்ளது புதனும் சென்று உள்ளது உதயம் என்பது ஜாதகர் 12-ம் இடம் என்பது புத்திக்கு எட்டாம் இடம் என்பதால் மறதியே தெரிவிக்கும் பாவம் அங்க கவிப்பு உதயதிபதி இருப்பது பொருளை யாரும் திருடவில்லை இவரே மறந்து வைத்து விட்டார் என்பதே உண்மை சற்று கவனிக்காமல் விட்டது வருத்தமே எனக்கு அதை விட புதிய அனுபவம் கிடைத்தது...


அதை போல் ஆருடம் ஆருடம் ஏன் பார்க்கிறோம் என்றால் கேள்வியாளர் கடந்த வந்த கேள்வியின் நிலையே சொல்லும் ஆருடம் அதருக்கு 5-ல் கவிப்பு புத்தி ஸ்தானத்தில் கவிப்பு நிற்பது 3-ம் அதிபதியான சந்திரன் நட்ச்சத்திர ஜாமைக்கோள் சந்திரன் ஆருடத்தை நோக்கி ஆருடம் அதிபதி கவிப்பில் சுக்கிரன் இவை எல்லாம் காரணமாக உள்ளது....நன்றி

No comments:

Post a Comment