ரோக ஸ்தானமான ஆறாம் அதிபதி தொடர்பு கொள்ளும் ராசி குறிக்கும் பகுதி நோயின் பாதிப்புகள் வெளிபடுத்தும் நோய் என்றாலே பிறப்பிலே உண்டாகும் அங்கினம் விபத்தால் ஏற்படும் வடுக்கள் உடல் பகுதி செயல் இழப்பு போன்றவே தசை புத்திகளுக்கு ஏற்ற போல் வந்து போகிற பாதிப்புகள் உண்டாகிறது..
ஆறாம் அதிபதி நோயே உண்டாக்கிறது என்றால் அவரின் நட்ச்சத்திர சாரத்தில் உள்ள கோள்கள் புத்திகளும் நோய் தன்மையே தருகிறது..
ஆறாம் அதிபதியோடு ராகு கேதுக்கள் தொடர்பு பெறுமாயின் பரம்பரை வழியிலான நோய்களுக்கு காரணமாக அமைகிறது
சனி ஆறாம் அதிபதி ஆனாலும் அல்லது ஆறாம் அதிபதியின் தொடர்பு நட்ச்சத்திர சாரம் பெற்றால் நிச்சயம் நோயின் கர்மாவவே அனுபவிக்க பிறந்தவர்கள் எனலாம் எளிதில் மருந்துக்கு கட்டுபடாது
ஆறாம் அதிபதி புதனாக இருப்பின் புதன் தொடர்பு பெறும் ராசியின் உறுப்புபில் நரம்பு பாதிப்புகள் நரம்பு தளர்ச்சி உண்டாக்கு தோல் நோய்கள் உண்டாக்கும் புதன் ஒன்றாம் பாவத்தில் நிற்கில் தலை நரம்புகள் பிரச்சினை ஒன்றை தலைவலி வருவதுக்கு காரணமான அதிக படியான சிந்தனை அழுத்தம் தலையில் உண்டாக்கும் பொடுகு பிரச்சினை அரிப்புகள் ரோகம் தோல் நோய்கள் உண்டு பண்ணும்
2-ம் இடத்தில புதன் இருப்பின் கண் நரம்பு அதில் உள்தன்மையில் பாதிப்பு கண் அலர்ஜி முளைக்கும் கண்ணின் நரம்புக்கு இடையில் உண்டாகும் முக்கிய நரம்புகளில் பாதிப்புகள் தரும் பலருக்கு முகத்தில் ஒரு பக்கம் இழுத்து கொள்ளும் வாய் கோணுதல் முகத்தில் தேம்பல் சிலருக்கு பிறப்பிலே பேச்சு வராது போதல் பேச்சு கொளறுதல் மூக்கில் சதை வளர்தல்....
3-ம் இடத்தில புதன் கழுத்து பகுதியின் நரம்புகளில் வலி உள் நாக்கில் பிரச்சினை பலர் பின் கழுத்து வலியால் அவதி படுவார்கள் நரம்பு பாதிப்பால் தைரைடு சுரப்பியில் பிரச்சினை தரும்

No comments:
Post a Comment