வெளிநாடு செல்ல பணம் ஏமாற்றம்
------------------------------------------------------
------------------------------------------------------
*வெளிநாடு செல்வதுக்கு agent-யிடம் பணம் கட்டி உள்ளார் நாற்பது நாளில் விசா வரும் என்று சொல்லி பணத்தை எடுத்து கொண்டு ஓடி விட்டார் கேரளா ஆள் ஒருவன் பணம் கிடைக்குமா பிரசன்னம் கேட்டார் ...
*இவரது கேள்வியே ஒருவரே நம்பி பணம் செலுத்தி உள்ளார் என்றால்? அவருக்கு அதுக்கான தகுதியும் சூழ்நிலையும் உள்ளதா என்று பார்க்க வேண்டும் கேள்வியின் தன்மையே ஆருடம் சுட்டி காட்டுகிறது.உதயத்துக்கு ஏழில் ஆருடம் ...
*ஆருடமே இவரின் கடந்த வந்த பாதை பாதிப்பு -கடந்த காலம் எனலாம் அதுவே 7-ம் இடமாக உள்ளது..ஆருட நாதன் 12-ல் மறைவு துர தேசத்து பயணத்துக்கு குறிக்கிறது...10-ம் அதிபதி எட்டில் கவிப்போடு அதனால் அலைச்சல் அவமானம் உண்டாகுதல்.3-ல் பாம்பு பயண தடையே சுட்டி காட்டுகிறது..
*பாக்கிய ஸ்தானமான ஒன்பது மற்றும் விரைய பாவமான வெளிநாடு பயணம் அதனால் உண்டாகும் லாபம் யோகம் யாவும் மேல் சொன்ன இரு பாவம் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் அல்ல அவ்பாவத்தின் அதிபதி குரு நீச்சம் பெற்று பத்தில் இருப்பது மிக பெரிய பலவீனம் இதில் முக்கியமாக agent-அனுப்ப முடியாதா நிலையே காட்டி உள்ளது
*கவிப்பு என்பது என்ன என்றால் நாம் ஒரு காரியம் செய்ய இறங்குகிறோம் வைத்து கொள்ளவோம் அவை வெற்றி பெற்றால் நன்மையே அவற்றில் பாதிப்பு அடைந்தால் அதறுக்கான காரணம் என்ன அதனால் உண்டாகும் சேதாரம் இவையாவும் சொல்லி விடும் இங்கு கவிப்பு பத்தாம் அதிபதி சனி நட்ச்சத்திரம் அவமானத்தை தந்து விட்டது//
*நிகழ் காலத்துக்கு வருவோம் உதயம் நின்ற நட்ச்சத்திர நாதன் குருவே ஆகி சுக ஸ்தானத்தில் அமர்ந்து பலம் இழந்து விட்டார் பாதகதிபதி சூரியன் உச்சம் பல பெற்று ஏழில் அமர்ந்து செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை பெறுகிறார் மிக பலமான பாதகமும் ஏமாற்றமும் செய்து இடம் மாறி தலைமறைவு ஆகிவிட்டார் agent...
*பயணத்தை குறிக்கும் குருவும் நீச்சம் வெளிநாடு செல்லும் பாக்கியம் தரும் ஒன்பதாம் வீட்டில் பாம்பு அதற்கும் தடையாக உள்ளார்.ரெண்டில் கவிப்பு சனி அமர்ந்து கவிப்பு நின்ற நட்ச்சத்திர நாதன் 12-ல் செல்வ இழப்பும் உண்டாக்கி உள்ளது எனலாம்...
*உதய அதிபதி சுக்கிரன் பத்தாம் அதிபதி சந்திரன் இருவரும் பலம் பெற்று உதயத்தில் மற்றும் 10ல் பலமாக உள்ளதால் பணத்தை விரைவில் வாங்கி விடலாம் என்பதே சொல்லி உள்ளேன் குறிப்பாக இதருக்கு எல்லாம் உதவியாக ஒரு பெண் இருப்பாள் அவளை பிடிக்கவும் என்றும் சொல்லி உள்ளேன்..அதை போல் சட்டபடி சென்று வழக்கு தொடரவும் என்பதே தெரிவித்தேன்--------

No comments:
Post a Comment