Tuesday, September 1, 2015

நாடியில் தசா புத்தி பார்ப்பது இல்லை

நாடியில் தசா புத்தி பார்ப்பது இல்லை ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் மேல் செல்கையில் உண்டாகும் கலவையே அதன் இரு காரகத்துவம் மட்டுமே நாடியின் சாராம்சம் ஆகும்.பாரம்பரிய ஜோதிடம் ஆயினும் நாடி ஜோதிடமாயினும் ரெண்டுக்கும் வித்தியாசம் சிறு மாறுதல்களே நாடியில் லக்னம் தேவை இல்லை தசா புத்தி தேவையில்லை வர்க்க கட்டமும் தேவைபடுவதும் அல்ல பலன்கள் எளிதாக சொல்ல முடிகிறது என்பது மட்டும் அனுபவ உண்மை...
பாரம்பரிய விதியில் பாவத்தையும் அதில் நின்ற கிரகத்தையும் பார்வையும் வைத்து பலன்கள் முடிவு செய்வதுக்குள் பலன்களே மாறி விடுகிறது..பார்த்த நேரத்தில் ஒருவனின் ஜாதகத்தை பார்த்து அவனது ஜீவக்காரகன் குருவே வைத்தும் 1-5-9-ல் உள்ள கிரகத்தை வைத்து ஜாதகனின் தன்மையே சொல்லி விடலாம் 3-7-11-ம் பார்வையே கொண்டும் அவனது வெளிமுக தன்மையே சொல்லி விடலாம
12-4-8ம் இடத்தை வைத்து அவனது மாறாத குணத்தையும் 2-6-10-ம் இடத்தை வைத்து அவனது வாழ்வின் பயணத்தில் மாற்றத்தின் குணத்தையும் அறிந்து விடலாம்.நாடி என்பது எளிது எப்போது எனில் கிரகத்தின் காரகத்துவம் அனைத்தும் இன்றைய நவீன உலகத்துக்கு ஏற்றபோல் நாம் நெறைய அறிந்து கொண்டால்.....

No comments:

Post a Comment