Tuesday, September 1, 2015

நாடி

நாடியின் படி ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் மேல் கோட்சார ராகுவோ கேதுவோ செல்லுவது அந்த கிரகத்தின் உண்மையான காரகத்துவம் பலன்களை தடுத்து வேறு பட்ட பலன்களாக தருகிறது சூரியன் மேல் ராகு சென்றால் தந்தைக்கு பாதிப்பும் உடல் நிலை குறைபாடுகளும் அந்தந்த காலகட்டத்தில் உண்டாகும் அரசு தொடர்பான வேலைகளோ முயற்சிகளோ இருப்பின் தடைகளும் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் தொல்லையும் நேருகிறது...
சூரியனின் காரகம் மட்டும் அல்லாமல் வயது மற்றும் காலத்துக்கு தகுந்தாற்போல் பலன் மாறுகிறது சூரியன் முத்த மகனையும் குறிக்கும் மாமனாரையும் தெரிவிக்கும் எவை யாவும் தலைமையே தெரிவிக்கிறோதோ அல்லது தலைமை பதவியில் உள்ளனரோ அவை யாவும் பாதிக்கப்படும் எனலாம்
சூரியன் என்றால் நாட்டை ஆளும் பிரதமர் முதற்கொண்டு முதல் அமைச்சர் வரை கோட்சார ராகுவே சூரியன் கடப்பின் பாதிப்புகளை சந்திப்பார்கள் ...இது போல் மற்ற கிரகத்தின் மேல் ராகு கேதுவின் பயணம் மனித வாழ்வினை நிர்ணயம் செய்கிறது

No comments:

Post a Comment