நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Monday, November 2, 2015
சனி பார்வையின் பலன்கள்
Posted on November 2, 2015 by admin
சனி பார்வை சனிக்கு 3-7-10-ம் பார்வைகள் உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம் இருக்கும் இடத்தையும் பார்வை செலுத்தும் பாவத்தையும் தாமதபடுத்துகிறார் என்றே அனுபவ உண்மை மிக மெதுவாக மற்ற கிரகத்தை விட இவரது பயணம் இருப்பினும் கால தேவனாக கர்மாவின் போக்கினை இவரே தீர்மானம் செய்கிறார்..
மிக கடுமையான உழைப்பே தந்து சோதனைகளே தந்து மனிதனுக்குள் அகங்கரம் என்பதே முழுமையாக நீக்கி உழைப்பே உயர்வே தரும் என்கிற தாரக மந்திரம் ஏற்படுத்தும் நாயகர்..
சனி இருக்கும் இடம் நமது கர்மாவின் புள்ளி பார்வை படும் இடம்கள் நாம் பிறவி எடுத்ததின் நோக்கம் அவற்றால் உண்டாகும் நன்மை தீமைகளே எதன் அடிப்படையில் கழிக்க வந்துள்ளோம் அவற்றை எதன் வழியில் கடக்க உள்ளோம் என்பதை லக்னம் படி சனி பார்வை செய்யும் இடம்கள் முழுவதுமாக சுட்டி காட்டுகிறது..
சனி ஒன்றாம் பாவத்தை பார்ப்பதால் ஒரு வித மந்த தன்மையோடு செயல் படுவார்கள் அல்லது வயதுக்கு ஏற்ற பக்குவத்தை கடந்து இவர்கள் செயல்பாடுகள் சிந்தனைகள் பலரே வியக்க வைக்கும் அளவு தர்மா போக்கோடு அமையும் சனி பார்க்கும் ராசி நெருப்பு ராசிகளான மேஷம் சிம்மம் தனுசுசாக இருப்பின் அனைத்திலும் வேகம் தந்து தான் எடுத்து கொண்ட லட்சியத்தில் எளிதில் வெற்றி பெற வேண்டும் ஏக்கம் தந்து ஓட வைக்கும் சனியின் பார்வை இருப்பின் அதன் போக்கில் சொல்ல முடியாத தடைகள் தந்து வெற்றி என்பதே சோதனை ஆகி விடுகிறது …
இறுதியில் மாபெரும்வெற்றியும் தருகிறது பெரும்பாலும் எனது அனுபவத்தில் சனி மேஷத்தை பார்வை செய்கிறார் மேஷம் செவ்வாயின் வீடு நெருப்பு ராசி ஒருவர் மேஷ லக்னத்தில் பிறக்கிறார் என்றால் மிகவும் வேகமாக சிந்திக்க கூடியவராக ஆதிக்க உணர்வும் எதையும் விரைவிலே வெற்றி பெற வேண்டும் என்கிற தன்மையை தரும் சனியின் பார்வை நிச்சயம் ஜாதகருக்கு வேக தடையே தந்து அவரது ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயல்பாடுகள் யாவும் தாமதப்படுத்தி இறுதியில் வெற்றிபெற வைக்கிறார் சனி செவ்வாய்க்கு ஏற்ற துறை சார்ந்த வகையில் ஏற்றம் தருகிறார்
Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment