Wednesday, June 29, 2016

பூர்வ ஜென்ம தொடர்பும் மனமும்

பூர்வ ஜென்மாவின் வாசம் நம் எல்லோருக்கு எதோ ஒரு விதத்தில் நம்மை அறியாமலே நாம் உணரும் நிலைக்கு தள்ளபடுவோம் பல நேரம்களில் சிலர் அவற்றை மேலும் மேலும் ஆத்மா பலத்தால் அறிந்து கொள்வதிலும் தொடர்பு படுத்தியும் வெற்றி அடைகிறார்கள் சிலரோ இது போன்ற நிலையால் மனரீதியாக பாதிப்புக்குள்ளான நிலையில் பலரால் புரிந்தகொள்ள முடியாத நிலைக்கு தள்ளபடுகிறார்கள்….. எதையும் அறிந்த கொள்வது எளிது அவற்றோடு மேலும் தொடர்பு ஏற்படுத்தி சரியான பாதையில் பயணிக்க நமக்கு ஆற்றல் இல்லையேல் பாதிப்பு நமக்கே என்பதில் மாற்று இல்லை… எனது நண்பர் என்னிடம் ஒரு விஷியத்தை சொன்னார் அதாவது சில மாதம்களுக்கு முன்பு அவரது தாய் இறந்துவிட்டார்கள் சில நாட்கள் கழித்து அவர்களின் தொடர்பு உண்டாகி உள்ளது இரவு நேரத்தில் தாய் குரல் கேட்பது கனவில் சில தகவல்களை சொல்வது அனைத்தும் மிக சரியாக இருந்துள்ளது அதோடு இவர்களின் வீட்டில் திருடன் புகுந்து விட்டான் அதையும் சொல்லி உள்ளார்கள் வீட்டில் திருடன் புகுந்து இருக்கிறான் அவனை போய் விரட்டி விடு இவரும் நன்றாக உறக்கத்தில் விழித்து விட்டு வெளியே சென்று பார்த்தால் திருடன் ஒருவன் வீட்டில் வந்து வண்டியே திருட முயற்சி செய்து உள்ளான்உடனே பிடித்து தனியாக காவல் நிலையத்தில் தந்துள்ளார்…. இன்னும் நிறைய சொன்னார் மேல் சொன்ன கதையே ஜோதிடம் அமானுஷ்யம் போன்றவை பற்றி சிறிது ஞானம் இருப்பதால் என்னால் அறிய முடிந்தது இதை பற்றி தெரியாதவர்கள் இவரே பாதிப்பு அடைந்தவர் என்றே சொல்லுவார்கள் நான் ஆரம்பத்தில் இருந்தே எதை ஒன்றையும் நம்புவதுக்கு முன்பு சொன்னவர் ஜாதகத்தில் கிரக சேர்க்கை தசை புத்தி தொடர்புகள் உள்ளதா என்பதே பார்ப்பேன் அவற்றின் தொடர்பு இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் எனது பதில்கள் தெரிந்த வழிகள் சொல்வேன் அமைப்பு இல்லை என்றால் முடிந்த வரை சொல்வேன் அதன் பிறகு ஆண்டவன் விட்ட வழி என்று முடித்து கொள்வேன் நண்பருக்கு தற்போது நடைபெறும் தசை செவ்வாய் தசையில் குரு புத்தி செவ்வாய் எட்டாம் இடத்தில் (கடகம்) சந்திரன் மேஷத்தில் செவ்வாய் சந்திரன் இருவரும் பரிவர்த்தனையில் உள்ளனர்…எட்டாமிடம் மரணம் விபத்து கண்டம் மட்டும் அல்ல மனிதனால் மனிதனுக்கு அப்பாற்பட்டு மறைந்துள்ள சக்திகளை தெரிவிக்கும் இடமும் ஆகும் அழ்மனம் புதைந்துள்ள தொடர்புகள் முற்பிறவியின் பரிபாஷைகள் யாவும் அடங்கும் இடம்! அதற்க்கான தொடர்பு வேண்டுமானால் பூர்வபுண்ணிய பாவம் தொடர்பு வேண்டும் இவரது ஜாதகத்தில் தனுஸ் லக்னம் ஐந்துக்கும் எட்டுக்கும் அதிபதியான செவ்வாய் சந்திரன் தொடர்பு வலிமையாக உள்ளது மாத்ருஸ்தானமான நாலாம் பாவத்துக்கு ஐந்தும் ஒன்பதும் குறிக்கும் செவ்வாய் சந்திரன் மீனம் அதிபதி குருவின் தொடர்பும் விருச்சகராசியில் உள்ள குருவால் பூர்வஜென்ம தொடர்பு உறுதி ஆகிறது …. இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஜாதகரின் தாய் செவ்வாய் தசையில் குரு புத்தியில் இயற்கை எய்தினார் கோட்சாரத்தில் ராகு சிம்மத்துக்கு வந்த காலமான இன்று,,,,, எட்டாம் பாவம் தொடர்பு மிக வலிமையாக நான் கேட்டது உங்களுக்கு முன்பே ஓர் ஆண் குழந்தை உள்ளது அதற்கு அடுத்து குழந்தை பெற எண்ணம் உள்ளதா என்றேன் ஆம் தற்போது மனனவி ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார் நான் சொன்னது அடுத்து பெண் குழந்தையே பிறக்கும் என்றேன் அதற்கு அவரது பதில் அம்மாவுக்கு பேத்தி பார்க்க வேண்டும் ரொம்ப ஆசை பேத்தி பிறந்ததே பார்த்து விட்டு தான் போகணும் சொல்லி கொண்டு இருப்பார் என்றார்… குழந்தை பிறந்த பிறகு அவரின் தொடர்பு தங்களுக்கு விடுபடும் அதோடு உங்கள் தாய்க்கு தங்களால் இயன்ற உதவி அவர்களது ஆன்மா பூரண நிலையே அடைய இறைவனே பிராத்திக்கவும் சொல்லி முடித்தேன் Make Money Online : http://ow.ly/KNICZ

No comments:

Post a Comment