நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Wednesday, June 29, 2016
நடிகர் திரு-கருணாஸ் அரசியல் எதிர்காலம்
(Karunas astrology Analyze) Posted on April 8, 2016 by admin
நடிகர்_திரு_கருணாஸ் அவர்கள் தமிழ்நாடு அரசியல் களத்தில் திடீர் ஜாக்பர்ட் அடித்தது போல் #அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பின பெற்றுள்ளார்..நெறைய பெரிய கட்சிகள் சீட்டுக்காக தவம் கிடைக்கையில் இவருக்கு ஒரு கட்சி உள்ளது அதை வைத்து சீட்டு தந்துள்ளார்கள் என்பது பரபரப்பாக மக்களே ஒரு நிமிடம் யோசித்து பார்க்க முடியாத அளவு #தேர்தலில் நிற்பது உறுதி ஆகிவிட்டது…… இவரது ஜாதகம் என்ன சொல்கிறது என்பதே பார்ப்போம் —-
சாதாரண நிலையில் உள்ள மனிதனை அவனை நினைத்து பார்க்க முடியாத வாழ்வினை அள்ளிதருவதும் நிற்க முடியாத இடத்தில பதவியோடு நிற்கவைப்பது தலைகிழ் மாற்றம் என்பார்கள் அவற்றை மாற்றி காட்டுவது ராகு பகவான் மட்டுமே என்பேன் எவர் ஒருவனுக்கு ராகு தசை யோகாதிபதி சேர்க்கை பெற்று தசை நடைமுறையில் வருகிறதோ அந்த ஜாதகனை சுகபோக வாழ்கை பட்டம் பதவி என்று புகழின் உச்சுக்கு கொண்டு செல்கிறது…..
#திரு_கருணாஸ் அவர்கள் பிறந்தது #ரிஷப லக்னம் #சிம்ம ராசியில் பிறந்துள்ளார் 2001-ம் ஆண்டில் சந்திரன் தசையில் நந்தா படத்தின் முலம் நகைசுவை நடிகராக அறிமுகம் ஆனார் #சந்திரன் சிம்மத்தில் கேது நட்ச்சத்திர பெறுகிறார் நான்காம்வீட்டில் உள்ளார் சந்திரனுக்கு ஆறு எழில் எட்டில் தொடர் கோள்களின் அமைப்பு #சந்திராதி யோகத்தை தந்தது சந்திரன் கேது சேர்க்கை பெரிய யோகமோ சிறப்போ சொல்லி விட முடியாது சுக்கிரன் சூரியன் பார்வையும் தான் நின்ற வீட்டின் அதிபதி பார்வையும் பெற்று சினிமா துறையில் பேரும் புகழும் செல்வாக்கும் உண்டாகியது … செவ்வாய் தசை சில மாற்றம்களும் செவ்வாய் 11-ம் இடத்தில் உள்ளதால் தனது அபிலாசைகளை பூர்த்தியாகும் வாய்ப்பே தந்தது திரை துறையில் சாதாரண நடிகர் கூட கதாநாயகன் ஆக விருப்பம் இருக்கும் அது #திண்டுக்கல்_சாரதி படத்தில் -முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்தார் 2௦௦9-ம் வருடத்துக்கு பிறகு சொல்லி கொள்ளும் அளவு வளர்ச்சி இல்லாமல் இவரது போட்டியாளர்கள் வளர்ந்து விட்டார்கள் எனலாம்…. தற்போது ராகு தசையில் சுயபுத்தி வருகிற ஜூலை மாதம் வரை நடப்பில் உள்ளது ராகு நடிகர சங்க விவகாரத்தில் வெற்றி வாய்ப்பே தந்தது திரை உலகில் மீண்டும் திரு-கருணாஸ்-க்கு திருப்புமுனை தந்தது.. சரி , அரசியல் வாய்ப்பு எப்படி கிடைத்தது இன்று வரை அவரது கட்சி ஒன்று இருப்பதே மக்களுக்கு சிறியதாக கூட அறியாத வண்ணம் காலம் செல்கையில் இவரது கையில் இன்று சட்டமன்ற தொகுதியில் நிற்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது இந்த உலகில் எந்த ஒரு தனிமனிதனை சாதரணமாக கணக்கிடு செய்தாலும் காலம் ஒன்றே (ஒவொருவருக்கும்) வைத்து உள்ளது ….அதன் படி பார்த்தால் ராகு சனி இருவரின் தன்மை ஆசிகள் மட்டுமே ஒருவனை மக்கள் சக்தி மிக்க தலைவராக பெரிய நிறுவனத்தில் பல்லாயிரம் ஊழியர்கள்மிக்க நிறுவனத்துக்கு அதிபதியாக ஆக்கி அழகு பார்கிறது….
சனி பகவான் மக்கள் வசியத்தையும் ஒரு சொல்லில் அனைவரும் வசிகரிக்கும் ஆற்றலே தரவல்லது… ராகு 10-ல் இருப்பது மிக சிறந்த யோகத்தை தர வல்லது #பத்தில்_ராகு_பெரும் பதவி தருவான் ராகு பத்தில் இருப்பதால் பதவி பட்டம் தருவான் என்பது எல்லாம் எல்லோருக்கும் பொருந்தாது ராகு லக்னம் யோகாதிபதி மற்றும் சுபரோடு சேர்க்கை பெறும் பட்சத்தில் யோகத்தினை செய்யும்…இவர் ஜாதகத்தில் #ராகு #சுக்கிரன்_சூரியன் தொடர்போடு சுக்கிரன் லக்னம் அதிபதி என்பதால் ராகு சூரியன் நான்காம் வீட்டுக்கு உடையவன் பத்தில் அமர்ந்து திக் பலம் பெற்று பலமாகி உள்ளார் பத்தில் சூரியன் ராகுவோடு தொடர்பு பெரும் பதவி தருவான் #சூரியன் தர வேண்டிய யோகபலனை ராகு தர ஆரம்பித்து உள்ளார் ராஜ்ய பாவத்தில் சூரியன் சுக்கிரன் ராகு தசை யோகமான பலன்களை தர ஆரம்பித்து உள்ளது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தொகுதியில் போட்டியுடுகிறார் ராகு தசை யோகமான பலனை இங்கு நிச்சயம் தருவர் ஏன் என்றால் #சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் #வர்த்கோத்மம பெறுவது மேலும் சிறப்பே தரும் #சுக்கிரன் ஆறாம் வீட்டுக்கு அதிபதி என்பதால் வெற்றி வாகை சூட நிச்சயம் வாய்ப்புகள் உள்ளது…… வெற்றி பெறுவார்…….. திரைதுறையிலும் மீண்டும் பிரகாசமாக வலம் வருவர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment