Wednesday, June 29, 2016

ராகு கேது ஆதிக்கமும் சூரியன் சந்திரனும்

தாய் தந்தைக்கு ஆயுள் எப்படி உள்ளது அவர்களது உடல் நிலை பாதிப்பு வருமா போன்றே கேள்விகள் முன் வைக்க படுகிறது ஜாதகம் பார்க்கும்போது பொதுவாக பாரம்பரிய முறையில் தசா புத்தி அந்தரம் தாய் தந்தைக்கு பாதகமாக உள்ளதா சாதகமாக உள்ளதா என்பது போன்ற பல விதிகள் உள்ளது… நாடி முறையில் மிக எளிதாக பலன் சொல்லி விடலாம் என்பது எனது அனுபவ உண்மை நாடியில் லக்னம் தேவை இல்லை தசா புத்திகள் அவசியம் இல்லை என்று சொல்லும்போது எல்லாம் நாடி பற்றியே ஆர்வமும் அறிந்து கொள்ளாதா காலகட்டம் நானும் பெரியதாக நம்பவில்லை கடந்த ஒரு வருடமாக நாடி ஜோதிடத்தில் என்னுள் ஏற்பட்ட ஆர்வத்தினால் பல நுட்பமான அறிந்து பலன் சொல்லி அசத்தும் போது வியந்து இருக்கிறேன் …..
ராகு பகவான் ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தை தந்தால் அதன் எல்லைவரை கொண்டு செல்லவர் …. கேது பகவான் ஒருவருக்கு விழுச்சி தந்தால் மனித வாழ்வின் ஆரம்ப நிலைக்கே இட்டு செல்வார் சோதனை மேல் சோதனைகளே அள்ளி தருவார்… ராகு கேது இரு புள்ளிகள் மற்ற கோள்களே இயக்கம் செய்கிறது தனது சூட்சமா ஆளுமையால் …ராகு பிறந்த ஜாதகத்தில் சூரியன் மேல் கோட்சாரத்தில் செல்லும் காலம் சூரியனின் காரகதத்துவம் கெட்டு விடுகிறது அல்லது சூரியன் தொடர்பான உறவுகள் பாதிக்கபடுகிறார்கள் தந்தைக்கு உடல் நிலை பாதிப்பும் இருதய பாதிப்பும் அரசு வழிகளில் பிரச்சினைகள் தருகிறது….. ராகு விபத்தும் எதிர்பாராத துர்மரணமும் தருகிறது….. நமது ஜாதகத்தில் சூரியனுக்கு திரிகோண ஸ்தானத்தில் 1-5-9 -ம் வீடுகளில் ராகு வரும் காலம் தந்தைக்கு நிச்சயம் உடல் உபாதைகள் தந்து சிரமத்தில் ஆழ்த்துகிறது சந்திரனுக்கு திரிகோணத்தில் வரும் காலம் தாய்க்கு மரணத்துக்கு சமமான கண்டம்களைதருகிறது கேது சூரியனுக்கு திரிகோண வீட்டில் வரும் காலம் தந்தைக்கு பெரும்பாலும் மரணத்தை தருகிறது சூரியன் தொடர்பான காரகம் கெடுகிறது பெரும்பாலான மக்களுக்கு சூரியனுக்கு மேல் கேது வரும் காலமே இதய கோளர்கள் உண்டாக்குகிறது சூரியன் கேது சனி முவரும் சந்திக்கும் காலம் தந்தைக்கு கர்மம் செய்யும் நிலை உண்டாகிறது….. கேது சந்திரனுக்கு திரிகோணத்தில் வரும் காலம் தாய்க்கு மரண கண்டம் உண்டாகுகிறது பெரும்பாலும் சந்திரன் சூரியன் தொடர்பான காரகம் பாதிக்கும் காலம் நான் மேல் சொன்ன விதியில் இல்லாமல் போக வாய்ப்புகள் குறைவே எண்ணுகிறேன் … ராகு ஒன்றே மிக பெரியதாக மிகைபடுத்தி இட்டு செல்கிறார் கேது ஒன்றே சிறுமைபடுத்தி அப்படி ஒன்றே இல்லவே இல்லை என்று இட்டு செல்கிறார்…..இரு முனை புள்ளியாக ……..தொடரும்…

No comments:

Post a Comment