Friday, September 2, 2016

தோஷமும் வாழ்வின் புரிதலும்

சிங்கப்பூரில் ஒருவர் ஜாதகம் பார்க்க என்னை அழைத்தார் என்ன காரணமாக என்பதே சொல்லவில்லை ஆயினும் அவரது நோக்கம் எதுவாக இருக்கும் என்பதே அறிவதில் ஜோதிடனின் வேலை ஆகும் வந்ததின் நோக்கத்தை அறிந்தால் மட்டுமே அவருக்கான விளக்கத்தை தர முடியும் விடையும் அளிக்கப்படும் நானும் கணித்து பின்பு பலன் சொல்ல தொடங்குகிறேன் ராசி லக்னம் கன்னி சுக ஸ்தானத்தில் நான்கு கோள்கள் அமர்ந்து குடும்ப ஸ்தானதிபதி சுக்கிரன் கேதுவோடு ஆறில் அமைந்து இருப்பது உங்கள் திருமண வாழ்வில் சிக்கல்களும் வேதனைகளும் நிறைந்தாக இருக்கும் வாழ்வில் சரியாக அனுபவிக்க வேண்டியதே அனுபவிக்க முடியாத நிலையே தரும் சமுகத்தில் நல்ல மரியாதையும் கவுரவமும் மற்றவருக்கு போதிக்கும் நிலையே தரும் படித்த கல்வியே விட அனுபவத்தில் பெற்றதே திறமையாக செய்து முடிப்பதில் வல்லவர் பத்தாம் வீட்டிலுள்ள செவ்வாய் எட்டாம் அதிபதியாக இருப்பது இயற்கையில் எதையும் கிரகித்து கொண்டு தனக்கான பாதையில் செல்லும் யோகம் என்றேன்…. உண்மையில் ஜாதகர் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் நல்ல சம்பளம் பொருளாதரத்தில் பிரச்சினை இல்லை இவர் திருமணம் வாழ்வில் சரியாக ஒன்ற முடியாத அளவு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் கன்னி லக்னம் நான்காம் இடமான தனுஸ் ராசியில் குரு சனி சேர்க்கை பெற்று 10-ம் இடமான மிதுனத்தில் செவ்வாயின் பார்வை முழுமையாக சுகத்தை கெடுத்து விட்டது எனலாம் இங்கு சுகம் கெட காரணம் நான்கு கோள்கள் சூரியனின் நெருங்கிய பாகையில் அஸ்தமனம் இருப்பினும் சனி புதன் வர்க்கோத்மும் அடைவது அவர் சார்ந்த கல்வியில் நல்ல நிலையே பதவியே தந்துள்ளது சுகம் மற்றும் மாதுர்ஸ்தானம் ஸ்தானதிபதி குரு பாதகாதிபதி ஆகி விரயஸ்தானதிபதி குரு சூரியன் சேர்க்கை நான்காம் வீட்டில் மனைவியோடு இணக்கமாக சேர்ந்து வாழ நிலையே ஏற்படுத்தி விட்டது குரு சனி சேர்க்கை பெறுவோருக்கு இருவரில் ஒருவர் பாதகதிபதியாக வருமாயின் திருமண வாழ்வில் ஒன்றே முடியாத நிலையே தருகிறது முக்கியமாக மனனவிக்கு உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகளே தருகிறது சிலருக்கு மனரீதியான பாதிப்பே தருகிறது ஆண் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாயோடு கேது சேர்க்கை இருப்பின் திருமண வாழ்வில் பிரிவுகளும் இருவரின் மனமும் எதோ ஒரு விதத்தில் வெறுமை வாழ்வே வாழ்கிறார்கள் இவரின் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை ஆறாம் வீட்டிலும் அதருக்கு ஐந்தில் செவ்வாய் தொடர்பும் மண முறிவே உண்டாக்கும் நிலையே தரும் திருமணம் ஆகி இது நாள் வரை பிரச்சினை மேல் பிரச்சினையில் செல்கிறது மனைவி தனக்கு செய்வினை வைத்து விட்டால் என்றும் அதனால் பாதிப்பும் என்று சொல்கிறார் இன்னொரு பக்கம் தனது அம்மாவோடு வாழ்கிறார் ஆனால் மனைவி சொல்வது மாமியார் தனது கணவனுக்கு செய்வினை வைத்து பிரித்து விட்டால் சொல்கிறாள் ஜாதகரின் இன்றையே பெரும்பாலான பொழுதே பள்ளியலே கழிக்கிறார் வீட்டுக்கு கூட போகாமல் நாலாம் பாவம் கெட்டுள்ளது தாயோடு இருப்பது இருவருக்கு தோஷமே பாதிப்பே ஆயினும் அதற்க்கான காலம் கடந்து விட்டது அவரது இறுதி கேள்வியும் ஒன்று தான் நான் மேல் சொன்னவே எல்லாம் அவருக்கு கவலை இல்லை கடந்து விட்டது கடந்த 2002-ம் வருடம் முதல் இவரது மனம் தியானத்திலே உள்ளதாம் மனம் சிவ லிங்கத்தின் மேலே தியானத்தில் உள்ளது இதற்க்கு என்ன காரணம் கேட்டார் அடுத்து சிலரோடு பூர்வ ஜென்மா தொடர்பு இருப்பதாக உணர்கிறேன் அவர்களோடு இணைய விரும்புகிறேன் என்றார் 2002-ம் வருடம் அஷ்டமாதிபதி செவ்வாய் உள்ள இடத்துக்கு கோட்சார சனி வரும் காலம் இவரின் உள் மாற்றம் ஏற்பட்டது மூன்று எட்டாம் பாவம் தொடர்பு கர்மா ஸ்தானத்தில் மறைமுக மாற்றம் உள்மன சக்தி துண்டுதல் என்பதே சொல்ல வேண்டும் ஆயினும் என்னால் இவற்றை ஏற்று கொள்ள முடியாது சனி குரு பார்வை அதோடு பாதகதிபதியும் குருவே பலி தெய்வத்தால் மிக வலிமையாக செய்யப்பட்ட தவறான செயலால் ஏற்பட்ட பாதிப்பு இவரின் தாய் வழியில் இறந்த பெண் ஆத்மாவின் சாபம் உள்ளதே உணர்ந்தேன்.. 12 வருடம் ஒருவன் தொடர் தியானத்தில் இருப்பின் அவன் நிலை என்ன என்பதே அளவிட முடியாத பிரபஞ்ச சக்தி அவனுள் வெற்றிடம் உண்டாக்கி விடும் … அடுத்த யார் மேல் ஈர்ப்பு ஆண் மேலா அல்லது பெண் மேலோ என்றேன் பெண் என்றார் எனது பதில் நிச்சயம் அவர்களுக்கும் உங்களுக்கு பூர்வ ஜென்ம இருப்பது உண்மையே ஒரு வேளை முந்தைய பிறவியில் அவர்கள் உங்கள் தங்கையாக அக்காவாக அம்மாவாக ஏன் பிள்ளையாக கூட இருக்கலாம் நமது மனித இனம் உடல் ரீதியாக மட்டுமே பழக்கபடுத்தி செல்கிறது என்னதா சொல்ல நடையே கட்டினர்… குரு தசை முடிந்து சனி தசை நடப்பில் உள்ளது அனைத்து கோள்களும் சூரியன் ராகுவின் நட்ச்சத்திரத்தில் உள்ளது கடைசியாக அவருக்கு பிடித்த பாடல் ஒன்றே என்னிடம் காட்டினர்” நான் கடவுள் படத்தில் வரும் அரகேரேசம்போ சிவா என்றே பாடலை ஒலிக்க விட்டு தியானத்தில் தன்னை கரைத்து கொள்வாராம்…. நமது வாழ்வினை புரிந்து கொள்வதில் புரியாமல் புரிந்து கொண்டதாக நினைத்தே மனிதன் நாள்களை இழக்கிறான்……

No comments:

Post a Comment