ஜாமகோள் பிரசன்னத்தில் கேள்வியின் தன்மையே அதிமுக்கியமானது கேள்வியாளரின் கேள்வியின் விடையே உதய லக்னம் சுட்டிகாட்டும் கேள்வியாளரின் வந்த நிலையே ஆருடமே சுட்டிகாட்டும் உதயம் என்பது நடக்க இருப்பதே தெரிவிக்கும் ஆருடம் என்ன நடந்தது என்பதே தெரிவிக்கும்
சில தினம்களுக்கு முன்பு அதிகாலையில் நண்பர் போன் செய்தார் அவரது மனைவிக்கு பிரசவவலி வந்து விட்டது மருத்துவ மனையில் சேர்த்து விட்டோம் மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் சொல்லுகிறார் செய்யலாமா ?
கன்னி உதயமாகி உதயத்தை நோக்கி சந்திரன் வருகிறார் சந்திரன் தாய்மை அடைவதும் விரைவாக காரியம் நடக்க இருப்பதே காட்டும் குழந்தை பிறப்பு பற்றி கேள்வி என்கிற போது நிச்சயம் குழந்தை பிறப்பே உறுதி செய்கிறது
நான் சொன்னது எப்படியும் இரண்டு நாளில் குழந்தை பிறந்தே ஆக வேண்டும் மருத்துவர் தற்போது உடனே செய்ய சொன்னால் செய்வது நலம் என்றேன்....
- குறிப்பாக உதயத்தை நோக்கி சந்திரன் வருவதால் பெண் குழந்தை பிறக்கும் என்றேன் 1 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அழைத்தார் குழந்தை பிறந்து விட்டது என்ன குழந்தை என்று கேட்டேன் ஆண் என்றார் உண்மையில் எனக்கு எதுவும் புரியவில்லை எங்க தப்பு செய்தேன் என் பலன் எப்படி மாறியது என்றவாறு சிந்தனை மீண்டும் காலையில் பார்த்த பிரசன்னத்தை எடுத்து ஆராச்சி செய்தேன் அவரது கேள்வியின் தன்மை தற்போது அறுவை சிகிச்சை செய்யலாமா ?
- சந்திரன் வருவதால் நிச்சயம் செய்தாக வேண்டும் இவையே சரி அதோடு மேல் சொன்ன பிரசன்னம் முடிவு பெற்றது
என்ன குழந்தை பிறக்கும் என்று கேள்வி எழுப்பவில்லை நண்பர் !
அப்படியே கேள்வி எழுப்பினாலும் சந்திரன் நிச்சயம் அதற்கு பதில் தரமாட்டார்இ ல்லை ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து விட்டது
அப்பொழுது நாம் பிரசன்னம் பார்க்ககையில் உதயத்தை நோக்கி வரும் கிரகத்தை ஆணா பெண்ணா என்பதே முடிவு செய்யலாம் குழந்தை பிறப்புக்கு சில மணி நேரம் அல்ல சில நாட்களுக்கு முன்பு என்ன குழந்தை என்பதே ஆருடம் மட்டுமே முடிவு செய்யும்
- ஆருடம் 11-ம் இடத்தில் ஆண் கிரகமான சாமைக்கோள் சூரியன் ஆருடத்தை கடந்துள்ளது அப்போ ஆண் குழந்தை பிறக்கும் நான் அவர் கேட்காத கேள்விக்கு பதில் சொல்லி தவறாக வந்தாலும் இதன் வாயிலாக புதிய அனுபவம் கிடைத்தது எமக்கு சில மாதத்துக்கு முன்பு என்னிடம் பிரசன்னம் கேட்டார் என்ன குழந்தை பிறக்கும் ?
அப்போது ஆண் குழந்தையே பிறக்கும் என்று உறுதியாக சொன்னேன் ....
No comments:
Post a Comment