நேற்று நண்பர் ஒருவர் தற்போது பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் கடினமான நிலையே பற்றி பிரசன்னம் கேட்டார்
- நானும் தற்போது இது போன்ற அரசியல் பரபரப்பு சம்வம்கள் பற்றி பார்ப்பது இல்லை வேண்டாமே விடுங்கள் என்றேன் அவர் விடாபிடியாக சொல்லியே தீர வேண்டும் என்றார்
- சரி ஆண்டவன் விட்ட வழி என்று அவர் கேட்ட நேரத்தில் உள்ள கிரக நிலைகளை பார்த்தேன்
- தனுசு உதயம் ( சுக்கிரன்)
- ஆருடம் மிதுனம் (சந்திரன்)
- கவிப்பு கும்பத்தில்
- கேள்வியின் சாரமே உடல் நிலை பாதிப்பு உதயத்துக்கு ஆறில் ஆருடம் என்பதால் நோய் பிரசன்னம் என்பது சரியாக உள்ளது
- உதயம் நின்ற நட்சத்திரதிபதி ஆறாம் இடத்து நோய் குறிக்கும் பாவமான ஆருடம் நின்ற வீட்டின் அதிபதியாக உள்ளது
- உதயத்தை கவிப்பு கடந்து இருப்பது கடுமையான உடல் நிலை பாதிப்பு அடைந்து இருப்பதும் கவிப்பு நின்ற நட்சத்திரதிபதி கேதுவாகி கும்பத்தில் அமர்வது சுவாசம் தொடர்பான நோயும் மூச்சு திணறல் பாதிப்பும் கேது என்பது நுண்ணிய கிருமிகள் ஊடக பரவும் நோய் தொற்றும் குறிக்கும் சூரியன் கேதுவோடு இருப்பது அவை கடுமையான காய்ச்சல் தந்துள்ளது
- உத்யாதிபதி பணிரெண்டில் இருப்பது உடல் ரீதியான பலம் இழப்பே காட்டுகிறது
- கவிப்பு செவ்வாய் மற்றும் கோட்சார செவ்வாய் ஒரே டிகிரியில் இருப்பது உடனடியான மருத்துவ அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் சுட்டிகாட்டினாலும் அவற்றை உடல் அவற்றை ஏற்றுகொள்ளும் பக்குவம் இல்லாத நிலையும் உறுதியும் இல்லை என்பதே தெளிவாக சுட்டிகாட்டுகிறது
- ஆருடத்துக்கு எட்டில் கவிப்பு செவ்வாய் இருப்பது சிறுநீரகம் பாதிப்பு அடைந்து இருப்பதும் சரியான இயக்கம் இல்லாத நிலையும் உள்ளது
- உதயத்துக்கு நான்கில் பாம்பு மாந்தி இருப்பது தற்போது இருக்கும் இடத்தை விட்டு வேறு இடம் மாற்றினால் விரைவில் குணமடையும் சூழல் உள்ளது அதோடு உதயம் நின்ற நட்சத்திரதிபதி ஒன்பதில் இருப்பது வெளிநாட்டு மருத்துவர்கள் துணை கொண்டு வைத்தியம் பார்த்தாலும் வெளிநாட்டு சென்று சிகிச்சை பெறுவதால் பூரண நலம் அடைய வாய்ப்புகள் உள்ளது.....
- சூரியன் கேது என்றாலே நோய் தொற்றும் உடலில் அதிகபடியான எதிர்ப்பு திறனை குறைத்து சுயநினைவே இழக்கவைக்கும் மூளையின் திசுக்களை சோர்வு அடைய வைக்கும் நிலையே காட்டுகிறது.....
- கேதுவால் ஒரு நோய் என்றால் சரியான நோயிக்கு காரணம் கண்டுபிடித்து பார்ப்பது கடினமே
- செவ்வாய் உதயத்தை நோக்கி வருவது அவற்றை எல்லாம் தாண்டி பூரண குணமடையும் நிலையும் அவர்களது உடல் நிலை ஏற்றுகொள்ளும் கொள்ளும் நிலையும் உண்டாகிறது
- வருகிற 11-10-2016 முதல் 13-10-2016 க்குள் மக்கள் அறியும் வண்ணம் காலை 7 மணியிலிருந்து 10மணிக்குள் தெரிய வரும்.....
- நேற்றைய நட்சத்திர மகத்துக்கு வதை தரையாகும்.....
- அவர்கள் பூரண குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்.....

No comments:
Post a Comment