Friday, September 2, 2016

ஜோதிட பாடலும் விளக்கமும்

அன்றே காரி சேய் மதியும் ஆறுஎட்டு பனிரெண்டில் நின்ற இருக்க ஜாதகருக்கு நிற்கமனையும் மிச்சமாகாது சென்றே இருக்ககுடி நாசம் சேர்ந்தார் கூட பிறந்தோரும் நன்றாய் மரணந்தானடைவார் நாடியுரைத்தார் மேலோரே விளக்கம் – சனி பகவானும் செவ்வாய் சந்திரன் 6-8-10-ல் சேர்ந்து இருந்தால் ஜாதகனுக்கு இருக்கு இடமில்லாமல் சென்ற இடமும் பாழாகும் கூட பிறந்தோரும் மரணமாவார்… சனி செவ்வாய் சந்திரன் மூவரும் சேர்ந்து இருப்பின் இது போன்ற பலன்கள் உண்டாக்கும் என்பதே பாடலில் சொல்லப்பட்டுள்ளது இவை அனைத்து லக்னத்துக்கும் பொருந்தாது என்பதே அனுபவ உண்மை மேஷ லக்னம் அதிபதி செவ்வாய் சுகஸ்தானதிபதி சந்திரனோடு சேர்க்கை பெறுவது சந்திராமங்கள யோகத்தை உண்டாக்கும்சனி ஜீவன் ஸ்தானதிபதி இணைவு பெறுகையில் சில பாதகமான பலன்களும் எதிர்பாராத விபத்துக்களும் உண்டாக்கும் ஏதேனும் நோய் உடல் ரீதியாக தொடர்ந்து கொண்டே இருக்கும் மூட்டுக்களில் தேய்மானம் உண்டாகும் பழைய பொருள்கள் வாங்க விற்க யோகம் தரும் தாய்க்குஅற்ப ஆயுள் தரும் அல்லது தாயோடு புரிதல் இல்லாமல் ஒதுங்கிய இருப்பார்கள் …. ஆறில் முன்று கிரகமும் இருந்தால் ஜாதகனுக்கு மிகுந்த துயரம்களை தருகிறது மேல் சொன்ன பாடலில் உள்ளபடி வசிக்க வீடு இல்லாமல் வரவே விட செலவு அதிகமாக ஆவதும் பேராசையால் அகலாகால் வைத்து அடுத்த வேலை ஜீவனத்துக்கு என்ன செய்வது என்றே அறியாத அளவு பிரச்சினை தருகிறது கால் மூட்டுகளில் நீர்கோர்த்து கொண்டு அவற்றால் வேதனையே அனுபவிக்க விடுகிறது காலமால்லாம் …. சந்திரன்-தாய் (சனி சித்தப்பா) செவ்வாய் சகோதர் குறிக்கும் மேல் சொன்ன காரகத்துவத்தில் எவர் தொடர்பான உறவு பாதிப்பு அடைந்துள்ளதோ அந்த கோளின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொதுவாக மேஷம் லக்னம் அதிபதி செவ்வாய் என்பதால் ஜாதகருக்கு வயிறு தொடர்பான ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்…. ஜாதகர் பிறந்த மனை இவரது ஆறு வயதுக்குள் பாழாகும் உடன் பிறந்த சகோதர் ஒருவர் துர்மரணம் அடைவார் கால் ஊனம் ஏற்படும்…இப்படி சனி செவ்வாய் சந்திரன் சேர்க்கை நமது ஊழ்வினை பயனால் எதன்படி கர்மாவோ அதன்படி அனுபவிக்க வைக்கும்…. பலருக்கு செவி திறன் பாதிப்பு தருகிறது…….மேல் சொன்ன பாடல் மேஸா லக்னத்துக்கு அதிக பாதக பலனை தருகிறது தசை புத்தியில் ….

No comments:

Post a Comment