நமது பிறப்பு ஜாதகமே பிரச்சனைகளின் மையே புள்ளி
- குடும்ப நபரின் ஜாதகமே குடும்பத்தில்நடக்கும் சம்பவம்கள் அனைத்துக்கும் மையே புள்ளியாக செயல்படுகிறது கடந்த வாரம் நண்பர் ஒருவர் புதிய இடம் வாங்க போகிறேன் இன்று நல்ல நேரம் எப்பொழுதும் பதிவு செய்ய அலுவலகம் வந்துள்ளேன் எந்த நேரம் சரியானது என்பதே சொல்லவும் என்றார்......
- ராகு காலத்தின் இடையில் மாட்டி கொண்டார் இடத்தை விற்பவர்களும் வந்து விட்டார்கள் யாம் சொன்னது ராகு காலத்தின் கடைசி 15நிமிடம் அமிர்த வேலை மிக விஷேசமானது அதில் பத்திரம் பதிவு செய்யுங்கள் என்றேன் பதிவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது..
- இன்று இரவு எம்மை தொடர்பு கொண்டார் அவரது மகனுக்கு உடல் நிலை சரியில்லை சரியாக சாப்பிட வில்லை வாந்தி மயக்கமாக உள்ளான் ஏன் என்று புரியவில்லை அதோடு இடத்தை பதிவு செய்த மறுநாளே எனது தாத்தா இறந்துவிட்டார் தற்போது மகனுக்கு உடம்பு சரியில்லை..
- நான் இடத்தை வாங்கிய உடனே இவை எல்லாம் நடக்கிறது மனம் குழப்பமாக இருப்பதாக சொன்னார் அதோடு தனது தாத்தா இறந்து விட்டது எமது மகனின் ஜாதகத்தில் சுட்டிகாட்டுகிறதா என்றார்....
- ஜாதகன் பிறந்தது ரிஷப லக்னம் கொள்ளு தாத்தாவே குறிப்பதும் ஜாதகனின் லக்கனமே
- தற்போது நடைபெறும் தசை புத்தி குரு தசையில் ராகு புத்தி செவ்வாய் அந்தரம் அஷ்டமாதிபதி தசையில் பாதகதிபதியோடு சேர்ந்த ராகு புத்தியில் அஷ்டமா ஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாய் புத்தியில் மரணத்தை தந்துள்ளது ஜாதகனின் கொள்ளு தாத்தாக்கு அவருக்கு வயது (98) அதோடு கோட்சார செவ்வாய் எட்டாம் இடத்திலே பிறப்பு செவ்வாயோடு உள்ளது
- அன்றையே கோட்சாரத்தில் தசை நாதன் நின்ற நட்ச்த்திரதிபதி சந்திரன் எட்டில் தசை நாதனோடு சேர்ந்த கேதுவின் நட்ச்சத்திரத்தில் கோட்சாரத்தில் மூலத்தில் சந்திரன் நிற்க தாத்தா இறந்து விட்டார் என்பதே பேரனின் ஜாதகத்தில் துல்லியமாக காட்டுகிறது
- ஒருவரின் ஜாதகத்தில் குடும்பத்தில் ஏதேனும் கர்மம் நடைபெற வாய்ப்பு உள்ளதா என்று பார்க்க சனியின் தொடர்பே முடிவு செய்யும் சனி எதன் கிரகத்தோடு தொடர்பு கொள்கிறதோ அதன் காரகம் மரணம் அடைவார்
- ராகு கேதுவுக்கு சனி தொடர்பு வரும் போதும் பிறந்த கால ராகுக்கு சனி தொடர்பு வருமானால் தாத்தா வழியில் மரணம் உண்டாகும் ஜாதகருக்கு பிறந்த கால சனிக்கு கோட்சார கேதுவின் தொடர்பும் பிறந்த கால ராகுக்கு மற்றும் சூரியனுக்கு சனியின் தொடர்பு உண்டாகி இருப்பதும் நிச்சயம் தாத்தாவுக்கு கர்மம் நடப்பதே உறுதி செய்கிறது...
- தாத்தா என்று வரும்போது தாத்தாவின் தந்தையே இன்னும் உயிரோடு இருந்து இருப்பது அவருக்கு கர்மம் நடந்துள்ளது என்றேன்
- சரி ஜாதகரின் தந்தை ஏன்இடம் வாங்கினார்என்பதே பார்ப்போம் 9-ம் பாவமான தந்தை ஸ்தானத்துக்கு குரு தசை போக மற்றும் விரையஸ்தானத்தை குறிக்கும் ராகு பாதக ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியனோடு செவ்வாய் நான்காம் இடமான வீட்டை குறிப்பவர் 12-ல் உள்ளது குரு கேதுவோடு வக்கிரம் பெற்று தாத்தாவே குறிக்கும் ஐந்தாம் வீட்டில் இருப்பது பூர்விகத்தை விட்டு வெளியூரில் இடம் வாங்கி உள்ளார் லாபஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் அதற்கான யோகத்தை தசையில் தந்துள்ளார்
- அஷ்டமாதிபதி சேர்கை பெற்ற ராகு (சூரியன்) மகரத்துக்கு வீடு யோகத்தை தந்து பாதகத்தில் அமர்ந்த காரகம் இழப்பு தந்து விட்டார்..
- ஜாதகனுக்கு தசையின் வீரியம் உடல் ரீதியான பிரச்சினைகளை தருகிறது காரணம் எட்டில் அமர்ந்த செவ்வாய் வயிற்று போக்கு போன்ற எட்டாமிடம் தொடர்பன பிரச்சினைகளை தருகிறது என்றேன்
No comments:
Post a Comment