Wednesday, October 12, 2016

தேர்வு பிரசன்னம்

நான் சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் பெண் ஒருவர் அடுத்த வாரம் #driving_licence எடுக்க போகிறேன் தேர்வு எழுதி விட்டேன் (அதில் வெற்றி பெற்று விட்டார்) வண்டி ஓட்டி காட்ட வேண்டும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றார்..


  • நானும் பிரசன்னம் பார்த்து முயற்சி செய்யுங்கள் ஆனால் அடுத்த முறை நிச்சயம் வெற்றி பெறுவீர் அதனால் இந்த முறை வெற்றி பெற மாட்டீர் சொல்லவில்லை என்றேன்....அந்த வகுப்பில் சில தவறால் தோல்வி பெற்றார்..
  • மீண்டும் நேற்று என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை(இன்று) பரிட்சைக்கு செல்கிறேன் வெற்றி பெறுவேனா கேட்டார்...
  • பிரசன்னம் பார்த்ததில் 100 சதவிதம் நீங்கள் வெற்றி பெறுவீர் கவலை வேண்டாம் காலையில் வாகன தேர்வு முடிந்த பிறகு தகவல் தாருங்கள் என்றேன்....காலையில் அந்த பெண் அலைபேசியில் தாம் வெற்றி பெற்றதா சந்தோசமாக சொன்னார் எமக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏன் என்றால் எனது பிரசன்னம் சரியாக இருந்தது அதை விட நான் சரியாக பார்த்து சொல்லி உள்ளேன் ஒரு ஜோதிடனுக்கு பலன் சொல்லி அவை சரியாக நடந்து விட்டால் அதை விட சந்தோசம் எதுவுமில்லை என்பது எனது கருத்து...
  • இது தொடர்பாக பெண்ணுக்கு பார்த்த பிரசன்னம் முன்பு யாவும் உதயம் கன்னி என்பதே ஆச்சரியம்..
  • உதயம் கன்னி
  • ஆருடம் மிதுனம்
  • கவிப்பு சிம்மம்
  • இந்த பிரசன்னத்தை பாருங்கள் ஜாமக்கோள் கிரகம் சரியான இடத்தில் கேள்விக்கு தகுந்தார்போல் சிறப்பாக அமைய பெற்றுள்ளது
  • உதயாதிபதி புதன் 5-ம் இடத்தில் ஆருடாதிபதியும் அவரே
  • வாகனம் தொடர்பான தேர்வு சுக்கிரன் நான்காம் இடத்தில் கவிப்பு நின்ற நட்சத்திராதிபதி சுக்கிரனே
  • பத்தாம் இடமான ஆருடத்தில் சூரியன் கவிப்பு நின்ற ஸ்தானதிபதி முந்தைய தேர்வில் தோல்வி அடைந்துள்ளது காட்டுகிறது ஆருடத்துகு 3-ல் அமர்ந்து முன்றாம் இடமானது ஒருவர் எழுத்து தேர்வாக இருக்கட்டும் பயிற்சி முறையில் வெற்றி பெறும் அனைத்துக்கும் மூன்றாம் இடமே காரகம்..
  • உதயத்தை நோக்கி வெற்றியே (11-ம் பாவம்)தரும் சந்திரன் வருகிறார் அதிலும் உடனே அடுத்த கணமே அடுத்த நாளிலே சம்பவத்தை நடத்தி வைப்பவர் சந்திரன் மட்டுமே உதயத்தை கடந்து கவிப்பு சென்று இருப்பது கேள்வியாளர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளார் என்றும்,,
  • சந்திரன் உதயத்தை நோக்கி 7டிகிரி வித்தியாசத்தில் உள்ளார் ஆதலால் கேள்வியாளர் வெற்றி உறுதி

நான் சொன்னது நீங்கள் நாளை நிச்சயம் வெற்றி பெறுவீர் வெள்ளை வண்ணம் உடை அணிந்து செல்ல சொன்னேன்.... வெற்றி......வெற்றி..வெற்றி

No comments:

Post a Comment