Wednesday, January 19, 2022

ராகுவு கேதுவும் பகவத் கீதையும்

வாழ்வில் நடைபெறும் சம்பவங்களும் மாற்றம்களும் கோள்களை நிர்ணயம் செய்கிறது 

சனி பகவான் மனிதன் எதை அனுபவிக்க பிறந்து உள்ளானோ அதை சரியான காலத்தில் தருகிறார் 

ராகு கேதுக்கள் வாழ்வின் வலியினை கர்மாவின் முடிச்சுகளை ஒருவர் அவிழ்க்கிறார்  மற்றோருவர் இறுக்குகிறார் 

பிறந்த ஜாதகம் எதை அனைத்தும் பெறும் பாக்கியம் உள்ளதோ எதை அடையவேண்டி கதியும் விதியும் இருப்பதை சொல்கிறது 

கோட்சாரம்  எவை எப்பொழுது நமக்கு கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது 

ராகு கேது பெயர்ச்சி சமீப காலமாக அதிகமாக பேசப்படுகிறது சனி பெயர்ச்சி போல் ராகு கேது பெயர்ச்சியும் ஓர் வித பயத்தை அனைவருக்குள்ளும் ஏற்படுத்தி விட்டார்கள் 

உண்மையில் கிரக பெயர்ச்சிக்கு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய சுக துக்கம் அனைத்தும் தருவித மட்டுமே 

எனது வாடிக்கையாளர் என்னிடம் சில நாட்கள் முன்பு கேட்டே கேள்வி ராகு ரிஷபத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது அவை பெயர்ச்சி ஆகும் சமயம் சூரியன் ராகுவாக வேலை செய்யும் உக்கிரமாக பலன் தரும் என்று ஒரு ஜோதிடர் பேசி உள்ளார் பயமாக உள்ளது என்றார் 

எனது ஜோதிட முறையில் யாம் சொன்னது ஐயா உங்களுக்கு ராகு கேதுக்கள் பெரிய மாற்றமும் வாழ்வில் புதிய தொடக்கமும் தரும் 

கடக லக்னம் நான்கில் செவ்வாய் கேது பத்தில் ராகு கேது செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை ஆதலால் தங்களுக்கு ஆன்மிகம் எண்ணமும் தியானம் இறை தேடுதல் உண்டாகும் யாரேனும் பகவத் கீதை புத்தகம் அன்பளிப்பு தருவார்கள் ராகு மேஷத்தில்  வரும் காலம் அல்லது தந்து இருப்பார்கள் என்றேன் அடுத்த நொடியே அவர் சில நாட்கள் முன்பு ஓட்டல் ஓன்றில் இரு நபர்கள் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சிறந்தவர்கள் புத்தகம் அன்பளிப்பு தந்தார்கள் என்றார் 

பத்தாம் இடம் கர்மா ஸ்தானம் நான்காம் இடம் வாகனம் (தேர்) அருஜுனுக்கு கிருஷ்ணா பகவான் உலக நியதியும் கர்மவினை போதித்தார் 

ராகு பகவான் மேஷத்தில் வரவில்லை என்றாலும் கார்த்திகை நட்சத்திரம் ஆரம்பம் புள்ளி செல்லும் முன்பே ராகுவின் நிழல் பட்டுவிட்டது கேள்வியும் பதிலும் கிரகம்கள் சொல்லி கொண்டே இருக்கும்

WhatsApp 8124345819

No comments:

Post a Comment