Tuesday, May 27, 2014

கெஜகேசரி யோகம்-3

போது விதிகள்; 
சந்திரன் குரு இருவரும் கேந்திர அதிபதிகள் ஆகி கேந்திரத்தில் இருப்பது யோகத்தை தராது...

6 ,8,12ம் வீடுகளில் இருப்பது யோகம் பங்கம் ஏற்ப்பட்டு பலன் தராது...

குரு சந்திரன் நீச்சம் பகை பெறுவதும் குரு அஸ்தமனம் பெறுவதும் இந்த யோகத்தின் தன்மை பயன் அற்றுபோகும்...

குரு சந்திரன் திதி சூனியம் அடையாமல் இருப்பது அதை விட முக்கியம்.....

யோகம் தரும் நிலைகள்;
சந்திரனுக்கு 7ல் குரு அமைவது முதல் நிலை யோகம் என்றும் குறிப்பாக இதில் ஒரு கிரகம் ஆட்சி,உச்சம்,வர்க்கோமாம் அடைவது இந்த யோகத்தின் பலனை வரி வழங்கும்....

சந்திரனுக்கு 1௦ல் குரு இருப்பதும் ரெண்டாம் நிலை யோகம்

சந்திரனுக்கு 4ல் இருப்பது முன்றாம் நிலை யோகம் என்றும் நடைமுறையில் உள்ளது இதற்கு பல விதிகள் உட்பட்டது....

நாம் அனைவரும் படிப்பது போல் கிரககள் சுலபமாக யோகம் செய்து விடாது..ஜோதிடர்கள் எளிதாக உங்கள் ஜாதகத்தில் கெஜகேசரி யோகம் இருக்கு என்று சொல்லி விடுவார்கள் அல்லது நாம் புத்தத்தை படித்த பிறகு தப்பாக கற்பனை செய்து கொள்ளுவோம்....

ஒரு கிரகம் யோகம் தர வேண்டும் என்றல் அதன் நட்ச்சத்திர சாரம் பார்க்கும் கிரகம் லகனத்துக்கு குரு சந்திரன் இருந்த வீட்டுக்கு அதிபதி இவை அனைத்தும் சார்ந்து தான் பலன் தரும்....

No comments:

Post a Comment