Tuesday, May 27, 2014

கெஜகேசரி யோகம்-4

யோகத்தை தர கூடிய கிரகம் லக்னம் 6,8,12ல் மறைவு பெறலாமா பொதுவாக ஒரு கருத்து உள்ளது.குரு மறைவு இடம்களில் இருப்பது ஜாதகனுக்கு யோகத்தை தராது...அந்த மாதுரி உள்ள ஜாதகத்தை ஒதுக்கி வைத்தல் நலம் என்று சொல்லுவது பரவலாக உள்ளது.

கடவள் அனுகிரகம் இல்லாத ஜாதகம் என்று சொல்ல கேள்வி பட்டு இருக்கன் எனது அனுபவத்தில் துளியும் உண்மை இல்லை....குரு மறைவு பெற்ற பலர் பெரும் கோடிஸ்வரனாக பலர் உள்ளனர்.ஏன் சிலர் ஆன்மிக குருவாக கூட உள்ளனர்......

யோகத்தை தரகூடிய குரு சந்திரன் மறைவு இடம்களில் இருப்பது ஒன்றும் இருக்க கூடதா இடம் இல்லை...மறைவு பெற்ற கிரகம் முலத்ரிகோணம் வீடு,ஆட்சி,உச்சம் பெறுவது யோகத்தின் பலனை முழுமையாக அதான் தசா புத்தி காலம்களில் தந்து விடும்

உதாரணம்:
சிம்ம லக்னம் எட்டில் குரு ரெண்டில் சந்திரன் இருப்பதும்....அல்லது 12 குரு 6ல் சந்திரன் இருப்பதும்

அடுத்து எட்டில் குரு, சந்திரன் கன்னி ,மிதுனம் ராசியில் இருப்பதும் யோகம் தான்....

விருச்சக லக்னம் குரு 12ல் இருந்து சந்திரன் 7ல் உச்சம் பெற்று செவ்வாய் தனுசு,மீனம் இவற்றில் இருப்பது செவ்வாய் குரு பரிவரிதனை அடையும் நிலையில் கெஜகேசரி யோகத்தின் பலன் முழுமையாக தரும்....இதில் குரு வர்க்கோமாம் அடைந்தலும் யோக பலன் தரும்....

கடக லக்னம் 3ல் சந்திரன் 6ல் குரு இருப்பதும் அல்லது மீனத்தில் சந்திரன் 6ல் குரு இருப்பது யோகத்தை தரும்....

குரு,சந்திரன் ஜாதகத்தில் ஆட்சி,உச்சம் பெற வேண்டும் என்று அவசியம் இல்லை...லக்னம் யோகதிபதிகள் சாரம் பெறுவதும்,சந்திரன்,குரு லகன சுபர்களாக இருந்து நட்சத்திர பரிவர்தனை பெறுவதும் கெஜகேசரி யோகத்தின் பலனை சூச்சமாக பலன் தரும்..

No comments:

Post a Comment