Sunday, August 3, 2014

பைக் விபத்த்தில் மரணம்

பிறந்த தேதி -10-11-1985 நேரம் ;1.25 மதியம் 

இடம் ;கடலூர்

இந்த ஜாதகர் பைக்கில் செல்லும்போது விபத்தில் அடிபட்டு மரணம் அடைந்து விட்டார்....

மகரம் லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்...இலக்கானதி சனி 11-ம் இடமான லாபத்தில் இருந்தாலும் மகரத்துக்கு பாதக ஸ்தானமான 11-ல் ராசி அதிபதி பாக்கியம் மற்றும் ரோகதிபதி புதன் சேர்க்கை...

அஷ்டமாதிபதி சூரியன் 10ல் நீச்சம் பெற்று சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தாலும் திதி சூனியம் ராசி துலாம் என்பதாலும் அதன் அதிபதி சுக்கிரன் பலம் இழந்து உள்ளது...சூரியன் நிச்சம் பங்கமும் பெறாமல் உள்ளது...
ராகு நான்கில் அமர்ந்து இருப்பதும் அஷ்டமதிபதி சூரியன் பாதகதிபதி செவ்வாய்யின் பார்வை ராகுக்கு இருப்பது அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலை தரும்...

பொதுவாக குரு லகனத்தில் இருந்தால் ஜாதகத்தில் எவளவு தோஷம் இருந்தாலும் விலகி விடும்.....ஆனால் இந்த ஜாதகருக்கு அவயோகதை தான் தந்தது.மகர இலக்கானத்துக்கு முழு பாவி குரு 1-ல் அமர்ந்து மற்றொரு மாரகதை தரும் கிரகமான சந்திரன் நட்சத்திரத்தில் இருப்பது நலம் தரும் அமைப்பு அல்ல...

இந்த ஜாதகர் ராகு பின் பகுதியில் வெளிநாடு நாடு சென்று நன்றாக சம்பாதித்து குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் யோகத்தை தந்தது.
குரு தசை ஆரம்பிக்கு பொழுது இவர் விடுமுறைக்கு வரும் பொது திரும்ப போகும் எண்ணம் இல்லாமல் இங்க இருந்து விட்டார்.....குரு தசை குரு புத்தி சூரிய அந்தரத்தில்
அதிகாலை பைக்கில் சென்று பஸ் மோதி இருந்து விட்டார்...

பகலில் குளிகன் என்றும் இரவில் மாந்தி என்று அழைக்க படும் சனியின் மைந்தன் இவர் இல்லாமல் எதிர்பாரத விபத்து மரணம் தூக்கிட்டு இறப்பது எதுவும் நடைபெறாது...விபத்து நடந்த அன்று கோசார நிலையானது....இவரது லக்னம் பாதக ஸ்தானத்தில் சந்திரன் மாந்தி ராகு இருப்பதும் பிறப்பு சனியின் மேல் மாந்தி கடப்பதும் விபத்து நடை பெற்று உள்ளது...
முக்கியமாக இந்த ஜாதகத்தில் சனி மேற்குகில் அஸ்தமனம் அடைந்து உள்ளது....

ஆயுள் ஸ்தானம் பலமற்று இருப்பதும் இளம் வயதில் மரணம் ஏற்பட கரணம்....

No comments:

Post a Comment