Monday, August 4, 2014

ஜாதகம் ஆயுள் தண்டனை கைதி

மீனம் லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள ஜாதகருக்கு பூர்வ புண்ணியாதிபதி சந்திரன் வலிமை பெற்று பூர்வ புண்ணிய பலம் நிறைந்தவர்...

லக்னம் அதிபதி குரு ஜாதகத்தில் தனது சுய வீட்டில் ஆட்சி பெற்று இருப்பதும் 10-ம் அதிபதி இவராக இருந்து வலிமை பெறுவதும் குரு லக்கனத்தில் இருந்தால் கோடி தோஷம் விலகும் என்ற விதி இருப்பதால் யோகமான ஜாதகம் என்று சொல்லலாம்...

முக்கியமான வீடுகள் பலம் பெற்று இருப்பது ஓரளவு யோக ஜாதகம் என்று அனைவரும் ஒத்து கொள்ளும் நிலை உள்ளது பிறகு ஏன் இவர் தற்போது கடலூர் மத்தியசிறைசாலையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்...?
எனது முந்தைய பதிவில் சொல்லியது போல் 1-ம் வீட்டை விட ஆறாம் வீடு பலம் பெறுவது சிறப்பு இல்லை.இவரோட ஜாதகத்தில் குரு ஆட்சி அடைந்து தனது சொந்த பீடத்தில் இருந்தாலும் ரோகதிபதி சூரியன் உச்சம் அடைந்து இருப்பது ஒரு வகையில் பலவீனம் தான் அடுத்து நான் பார்த்தவரை மிதுனம் ,கன்னி ,தனுசு ,மீனம் உபய லக்னத்தில் பிறந்தவருக்கு அதன் அதிபதி 1-ல் ஆட்சி பெறுவது தோஷத்தை தான் தருகிறது அதன் தசை புத்திகளும் தீமைகள் உண்டாகுகிறது...

5-ம் வீட்டு அதிபதி சந்திரன் ரோகதிபதி சூரியன் காலில் இருப்பதும் ஒரு வகையில் பூர்வ புண்ணியம் பலம் அடைந்தும் அவை தீய கர்மாவை அனுபவிக்க பிறந்தவர் முன் ஜென்ம வினை..

ஒருவருக்கு 5-ம் பாவகம் மூலாதாரம் என்றால் அதை அனுபவிக்கும் இடம் 9-ம் இடம் இங்கு ராகு இருப்பது சனியின் காலில்....9-ம் அதிபதி செவ்வாய் 12-ல் இருப்பது மேலும் தோஷதை அதிகம் உண்டாகி உள்ளது...ராகு தசையின் முதல் பகுதியான கேது புத்தி வரை ஜாதகர் போடாத ஆட்டம் இல்லை அரசியல் அதிகாரம் அனைத்தும் இவரது கைவசம் இருந்தது....தனக்கு அழிவு என்பது இல்லை என்ற அககாரத்தில் இருக்கும் நேரம் சுக்கிர புத்தியில் செவ்வாய் அந்தரத்தில் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி சண்டையில் கொலை வழக்குகாக தண்டனை பெற்றார்...
சுக்கிரன் அஷ்டமதிபதி நாளில் சனி சேர்க்கை ராகு காலில் நிற்கிறது...ஆறாம் அதிபதி 2-ல் உச்சம் பெற்று இருக்கிறது....

இவை எல்லாம் இருந்தாலும் எனோட தனிப்பட்ட ஆய்வில் செவ்வாய் மற்றும் சனி இதற்குள் அணைத்து கிரகமும் அடைபெற்று இருப்பது சனி செவ்வாய் இருவரும் குரு நட்ச்சத்திர காலில் இருப்பதும் ஜெயிலில் காலம் தள்ளும் நிலை தந்து விட்டது....
இது போல் கிரக நிலை அடைபட்டு உள்ள ஜாதகர் கடைசி வரை போரட்ட வாழ்வு வாழ்வார்.....

நன்றி ..பார்த்தசாரதி,கடலூர்

No comments:

Post a Comment