Tuesday, September 16, 2014

17-9

திருமண வாழ்வு ஒருவருக்கு யோகமாக சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் 2-4-7-8-11-ம் இடம்கள் பாதிக்க படாமல் அதன் அதிபதிகள் சுப கிரக களின் சேர்கை பார்வையோடு இருக்க வேண்டும்...அதிலும் சில சிலருக்கு குடும்பம் அமைந்தும் அந்த வாழ்கைய அனுபவிக்க தெரியாமல் பிடிவாதத்தால் வாழ்கைய தொலைத்தவர்கள் அதிகம்....அப்படி ஒரு ஜாதகத்தை தான் நேற்று பதிவு செய்து இருந்தேன் ஏன் அவருக்கு திருமணம் ஆகியும் பிரிவு ஏற்பட்டு இது நாள் வரை (வயது55 ) மறுமணம் செய்து கொள்ள வில்லை குழந்தையும் இல்லை என்பதை எனது பார்வையில் எழுதுகிறேன்....

சிம்ம லக்னம் ரிஷப ராசியில் பிறந்து உள்ள இவருக்கு குடும்பாதிபதி புதன் 3-ல் ஆட்சி பெற்ற சுக்கிரன் சேர்க்கையோடு பலமாக உள்ளது.இருவரும் பூர்வ புண்ணியாதிபதி குருவின் சாரத்தில் பலத்தோடு அமைந்து உள்ளனர்...

நான்காம் அதிபதி செவ்வாய் தந்து சுய வீட்டினில் ஆட்சி பெற்று லக்னம் அதிபதி சூரியன் சேர்க்கை பெறுவது அதுவும் யோகமான கிரக சேர்க்கை தான் அவர் பதாகதிபதி யாக இருந்தாலும் நான்கில் ஆட்சி பெறுவது பாதிப்பு அதிகம் இல்லை எனலாம்...

7-ம் அதிபதி சனி 6-ல் இருப்பதும் அங்கு குரு நீச்சம் பங்கம் பெறுவதும் கேது சேர்க்கை பெறுவதும் பொதுவாக இந்த ஜாதகத்தினை பார்த்தால் சற்று குழப்பமாக இருக்கும்....

நான் பார்த்த வரை சனி ஆறில் இருப்பது மிக பெரிய யோகத்தையும் நன்மையும் தான் செய்து வருகிறது அந்த வகையில் இவரோட திருமண வாழ்வு பாதிப்புக்கு சனி ஆறில் அமர்ந்தது தான் காரணம் என்று சொல்ல மாட்டேன் வேறு காரணகள் என்ன...

2-4-7-8-11-பலம் பெற்றும் திருமண வாழ்வு சுகம் இல்லாமல் போய் விட்டது ......அடுத்த பதிவில் வரும்

No comments:

Post a Comment